செய்திகள்

சபரிமலை சன்னதிக்குள் நுழைந்த கம்யூனிஸ்ட் பெண்கள் : கோவில் நடை சாத்தப்பட்டது – சோகத்தில் ஆழ்ந்த கோடிக்கணக்கான ஹிந்துக்கள்

கேரள மாநிலம் கோழிக்கோடு கொயிலாண்டியில் கம்யூனிஸ்ட் கட்சியை(CPI-ML) சேர்ந்த பிந்து(42), மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகியோர் கடந்த மாதம் 24-ம் தேதி அதிகாலை இருமுடி கட்டி பம்பையில் இருந்து சன்னிதானம் புறப்பட்டனர். பம்பை போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்கள் அப்பாச்சிமேடு வரை தடங்கலின்றி நடந்து சென்றனர்.

அப்பாச்சிமேடு சென்றதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் திடீரென அங்கு குவிந்து போராட்டம் நடத்தியதால் அவர்களை மேற்கொண்டு அழைத்துச் செல்ல முடியவில்லை. போராட்டம் தீவிரமடைந்ததால் பெண்கள் இருவரும் சபரிமலையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

 

அவர்கள் நேற்று மீண்டும் ஹிந்து விரோத கேரள கம்யூனிஸ்ட் அரசின் காவல்துறை பாதுகாப்புடன் சபரிமலைக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 3.45 மணிக்கு  இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் 18 படி ஏறாமல் மற்றொரு வாசல் வழியாகச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பெண்கள் இருவரும் கோவிலுக்குள் செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

 

இதனை தொடர்ந்து, பரிகார பூஜை செய்வதற்காக ஐயப்பன் கோவில் நடை சாதப்பட்டுள்ளது. கடவுள் பக்தி இல்லாதவர்களாகவும், நாத்திகர்களாகவும் காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகள் ஹிந்து மதத்தை பல வகைகளில் தாக்கி வருவதாகவும் அதன் ஒரு பகுதி தான் இது என்றும் கருதப்படுகிறது.

 

இந்த செயல் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஹிந்துக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக காக்கப்பட்டு வந்த சபரிமலை ஐயப்பன் சன்னதியின் புனிதம் ஹிந்து விரோத கேரள கம்யூனிஸ்ட் அரசின் ஹிந்து விரோதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக ஹிந்துக்கள் கருதுகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close