செய்திகள்

ஐயப்ப பக்தர்களை மீண்டும் புண்படுத்திய பினராயி அரசு! போலீஸ் உதவியுடன் கோவிலுக்குள் ரகசியமாக நுழைந்த பெண்களால் பதற்றம்: தேவசம் போர்டு அமைச்சர் மீது தாக்குதல்!

சபரிமலைக்கு இன்று அதிகாலை சென்ற 40 வயதான இரண்டு பெண்கள் மிகவும் இரகசியகமாக போலீசார் உதவியுடன், 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசித்துவிட்டு  வெளியே வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இன்று காலை பரிகாரம் செய்வதற்காக நடை மூடப்பட்டது. பரிகாரம் முடித்தபின் மீண்டும் 11 மணியளவில் நடை திறக்கப்பட்டது. இச் சம்பவம் அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களிடையேயும், கேரள மக்களிடையேயும்  பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கேரள தேவசம் போர்டு அமைச்சர் இந்த சம்பவம் தொடர்பாக தாக்கப்பட்டார் என செய்திகள் வந்துள்ளன.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் மாதம் ஐயப்பன் சன்னதிக்கு வந்தனர். பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் சபரிமலைக்கு செல்ல பம்பை வந்த இரண்டு பெண்களும், காவல்துறை அனுமதியோடு நேற்று இரவு மீண்டும் மலை ஏறத் தொடங்கினர். இன்று அதிகாலை 3.45 மணியளவில் கோயிலுக்குள் நுழைந்து ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு காலை 5 மணிக்குள் மலையில் இருந்து கீழே இறங்கியுள்ளனர்.

பம்பை வந்த இரண்டு பெண்களும், காவல்துறை பாதுகாப்போடு நாங்கள் ஐயப்பனை தரிசித்து வந்தோம் என்று தெரிவித்த பிறகே இரண்டு பெண்கள் ஐயப்பனை தரிசித்த விவகாரம் வெளியே தெரிய வந்தது. இதனிடையே சபரிமலை தந்திரியின்  ஆலோசனையின் பேரில்  சாந்தி பரிகாரம் செய்ய ஐயப்பன் கோயில் நடை காலை முதல் மூடப்பட்டது. இதனால் சபரிமலை கோயில் பகுதிகளில் பதற்றம் நிலவியது. பரிகார பூஜைகள் முடிந்தபின்பு, இன்று காலை 11 மணியளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டது. ஐயப்ப பக்தர்களை புண்படுத்தும் இதுபோன்ற சம்பவங்களை கேரள மாநிலத்தில் ஆட்சி புரியும் பினராயி அரசே தூண்டி வருவதாகவும், போலீசார் மூலம் கோவில் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநில தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் சென்ற கார் மீது தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக செய்திகள் வந்துள்ளன.

Tags
Show More
Back to top button
Close
Close