தமிழ் நாடு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளை ரகசியமாக சந்தித்த அமெரிக்க வாலிபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை -போராட்டத்தின் பின்னணியில் உள்ள வெளிநாட்டு சதிகள் குறித்து போலீசார் கேள்விக் கணை!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 1 ஆண்டாக அங்குள்ள சில அமைப்பினர் பொதுமக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்திவந்தனர். போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் மற்றும் போராட்டங்களின் பின்னணியில் வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷனரிகள் உள்ளதாகவும், அவர்களின் தூண்டுதல் காரணமாகவே போராட்டம் நடைபெற்றதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வந்தன. ஸ்டெர்லைட் நிர்வாகமும் அதே போன்ற குற்றச்சாட்டை சாட்டியது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையும் மூடப்பட்டுள்ளது. மூடப்பட்ட ஆலையை திறக்கக் கோரி ஆயிரக் கணக்கானோர் அரசிடம் மனு அளித்து வருகின்றனர். போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி தேசிய பசுமை ஆணையம் உததரவிட்டுள்ளது.   

இந்தநிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்ட குழுவினரை அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு கிறிஸ்தவ இளைஞர் இரகசியமாக சந்தித்து வருவதாகவும், ஆலைப் பகுதிகளை அந்த நபர் நோட்டமிட்டு கேமிரா மூலம் படம் பிடித்ததாகவும் தகவல்கள் வந்தன. இதை அடுத்து போலீசார் அந்த இளைஞரை பிடித்து 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, அந்த இளைஞர் தவறு செய்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். இதனிடையே அமெரிக்க இளைஞரை சந்தித்து பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பாத்திமா பாபு, ராஜா, ரீகன், பிரின்ஸ் ஆகியோருக்கு தூத்துக்குடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close