இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித், நடிகை நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. பொங்கலை முன்னிட்டு ஜன.,10ம் தேதி வெளியாகிறது.

டிரைலரும் வெளியாகி பல சாதனைகளை படைத்தது வருகிறது.இந்த படத்துக்கான ப்ரீ புக்கிங் எப்போது அறிவிக்கப்படும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ப்ரீ புக்கிங் அறிவிக்கப்பட்டதும் இணையம் வழியாக டிக்கெட்டுகளை வாங்க, அஜித் ரசிகர்கள் அலை மோதினர்.

Advertisement

புக்கிங் துவங்கிய அரை மணி நேரத்திலேயே, அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக, சென்னை, சத்யம் தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, விஸ்வாச படக் குழுவினர் குஷியாகி உள்ளனர்.

Share