இந்தியா

238 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து மோடி சர்க்கார் சாதனை – 2019 ஆம் ஆண்டில் அரிசிக்கு தட்டுப்பாடு வராது …

நாட்டில் உணவுப் பஞ்சம் வரக் கூடாது என்பதற்காக மத்திய அரசு உணவுப்பொருள்கள் அமோகமாக விளையக்கூடிய பஞ்சாப், ஹரியானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிமாநிலங்களில் இருந்து முதல் கட்டமாக தானியங்களை டிசம்பர் மாதத்துக்குள் வாங்கி, சேமிப்பு கிடங்குகளில் குவிப்பது வழக்கம். அதேபோல நடப்பு ஆண்டில் இது வரை மேற்கண்ட மாநிலங்களிலிருந்து 238.8 லட்சம் டன் நெல்லை மோடி சர்க்கார் கொள்முதல் செய்துள்ளது. போதுமான விவசாய உற்பத்தி இல்லாத மாநிலங்களுக்கு மத்திய அரசு குறைந்த விலையில் இந்த பொருள்களை சப்ளை செய்வது வழக்கம். அடுத்த கட்டமாக நெல் அமோகமாக விளையும் பீகார், தெலங்கானா, மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசத்திலிருந்தும் வரும் ஜனவரி மாதம் முதல் அறுவடையாக உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்த ஆண்டு நாட்டில் மழை குறைவாக பெய்த போதிலும் சென்ற ஆண்டில் கொள்முதல் செய்த 381.8 லட்சம் டன் நெல் அளவுக்கு இந்த ஆண்டும் கொள்முதல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே வரும் 2019 ஆம் ஆண்டில் உணவுப் பஞ்சம் வராத அளவுக்கு சமாளிக்கும் நிலையை மத்திய அரசு அடைகிறது.

பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவுப் பொருள் கழகம் சார்பில் இந்தக் கொள்முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது.

பஞ்சாப்பில் 113 லட்சம் டன் நெல்லும், ஹரியாணா மற்றும் சத்தீஸ்கரில் முறையே 39.09 லட்சம், 22.42 லட்சம் டன் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் 22.46 லட்சம் டன் நெல்லும், உத்தரப் பிரதேசத்தில் 13.28 லட்சம் டன் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் 10.7 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

பீகார், மேற்கு வங்கம் போன்ற மேற்கு மாநிலங்களில் ஜனவரி மாதம் முதல் நெல் கொள்முதல் தொடங்கவிருக்கிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நெல் கொள்முதலை இந்திய உணவுப் பொருள் கழகம் மேற்கொண்டு வருகிறது என இந்திய உணவுப் பொருள் கழக அதிகாரிகள் கூறினர்.

Tags
Show More
Back to top button
Close
Close