இந்தியா

25.6 கோடி வங்கி கணக்குகள், ₹85 ஆயிரத்து 494 கோடி வைப்புத் தொகை – உலகம் வியக்கும் மோடி சர்க்காரின் ஜன் தன் திட்டத்தின் இமாலய சாதனை

முப்பத்து மூன்றரைக் கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில் 25 கோடியே அறுபது இலட்சம் கணக்குகள் செயல்பாட்டில் உள்ளதாக மோடி சர்கார் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜன் தன் வங்கிக் கணக்குகளின் செயல்பாடு குறித்து மக்களவையில் ஜார்ஜ் பாக்கர், வருண் காந்தி ஆகியோர் வினா எழுப்பினர். அதற்கு நிதியமைச்சகம் சார்பில் எழுத்து மூலம் பதிலளிக்கப்பட்டது. அதில் ஜன் தன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் முப்பத்து மூன்றரைக் கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதாகவும், அவற்றல் 25 கோடியே அறுபது இலட்சம் கணக்குகள் செயல்பாட்டில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்தக் கணக்குகளில் ₹85 ஆயிரத்து 494 கோடி வைப்புத் தொகையாகச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close