தமிழ் நாடு

பா.ஜ.க-வில் சேர மு.க.அழகிரி திட்டம்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு!

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி பா.ஜ.க-வில் சேரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த தி.மு.க தலைவரின் மூத்த மகன் அழகிரி. தி.மு.க-வின் தென் மாவட்டங்களின் நிர்வாகப் பொறுப்பை கவனித்து வந்தார். மத்திய அமைச்சராகவும் இருந்தவர். இவருக்கும் இவரது தம்பியான மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கருணாநிதி உயிருடன் இருந்த போதே கட்சியில் அதிகாரத்தை பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. ஆனால் கருணாநிதி மு.க.அழகிரியை கட்சியிலிருந்து நீக்கினார். கருணாநிதி குடும்பத்தினரும் அழகிரிக்கு ஆதரவாக இல்லை. தனித்துவிடப்பட்ட அழகிரி தந்தை உயிரோடு இருக்கும்போதே தன்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டு ஏதேனும் பொறுப்பு கொடுப்பார்கள் என எதிர்பார்த்தார். ஆனால் பாண்டவர்களுக்கு எதையும் கொடுக்காத கவுரவர்கள் போல அனைவரும் நடந்து கொண்டனர். இதனால் விரக்தியடைந்த அழகிரி தனிமையானார். இடையில் கருணாநிதி மரணமடைந்தார். அதன் பிறகாவது குடும்பத்தினர் சமாதானப் பேச்சு வார்த்தை  நடத்துவார்கள் என எதிர் பார்த்தார். ஆனால் மு.க.ஸ்டாலினை வலியுருத்தி பேசும் துணிவு அங்கு யாருக்கும் இல்லை. தனிமையில் விடப்பட்ட அழகிரி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

அழகிரி தனது நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அடிக்கடி சந்திப்பது வழக்கம். இதனிடையே, அமெரிக்கா சென்ற அவர் அங்கு ஓய்வு எடுத்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. புத்தாண்டுக்கு பிறகு தான் அவர் சென்னைக்கு திரும்புகிறார். அமெரிக்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் அவரை மு.க.அழகிரி ஏற்கனவே சந்தித்து பேசியதாக சென்னைக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, ரஜினிக்கும், மு.க.அழகிரிக்கும் இடையே நல்ல நட்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், அவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், மு.க.அழகிரி பா.ஜ.க-வில் சேரக்கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பா.ஜ.க-வில் மு.க.அழகிரி சேருவது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை என்று கூறினார்.

Inputs – Maalai Sudar

Tags
Show More
Back to top button
Close
Close