சினிமா

ஒத்தைக்கு ஒத்த வாடா!!! கொலமாஸ் ட்ரைலர் – கிராமத்து பின்னணியில் பின்னி எடுத்த விஸ்வாசம் ட்ரைலர் #ViswasamTrailer

அஜித் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடியே ‘விஸ்வாசம்’ டிரைலர் வெளிவந்துள்ளது.

‘விஸ்வாசம்’ டிரைலரின் ஆரம்பத்திலேயே “வாழ்க்கையில ஒரு தடவ அழாத பணக்காரனும் இல்ல, ஒரு தடவ சிரிக்காத ஏழையும் இல்ல” என அஜித் குரல் ஒலிக்க ஆரம்பம் ஆகிறது ட்ரைலர்

‘பங்காளிங்களா, அடிச்சித் தூக்கலாமா’ என வசனம் பேசிக் கொண்டே எதிரிகளை அடித்துவிட்டு டிரைலரில் என்ட்ரி ஆகிறார் அஜித். இளமையான அஜித்தும் வருகிறார், நரைத்த தலைமுடி, தாடி, மீசை என கொஞ்சம் நடுத்தர வயது அஜித்தும் வருகிறார். இருவரும் ஒருவரா அல்லது படத்தில் அஜித் இரு வேடங்களா என்பது குழப்பம்தான்.

நயன்தாராவைப் பார்த்து ‘நீங்க பேரழகு’ என காதல் வசனம் பேசுகிறார். படத்தின் வில்லன் ஜெகபதிபாபு, “என் கதையில நான் ஹீரோடா” என வசனம் பேச பதிலுக்கு அஜித் ‘என் கதையில நான் வில்லன்டா’ என பன்ச் வசனங்கள் தெறிக்க விடுகிறது.

டிரைலரின் கடைசியில் வில்லன் ஜெகபதிபாபுவிடம், “ஏறி மிதிச்சன்னு வையி, ஏரியா வாங்குறதில்ல, மூச்சைக் கூட வாங்க முடியாது” என பன்ச் வசனம் சன் பிக்சர்ஸை குறிக்கும் வகையில் அமைகிறது.

‘பேட்ட’ டிரைலரின் கடைசியில் ரஜினிகாந்த் “ஏய், எவனுக்காவது, பொண்டாட்டி, குழந்தை, குட்டின்னு சென்டிமென்ட், கின்டிமென்ட் இருந்தால், அப்படியே ஓடிப் போயிடு, கொல காண்டுல இருக்கேன், மவனே, கொல்லாம விட மாட்டேன்” என வசனம் பேசியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக ‘விஸ்வாசம்’ பட டிரைலரில் அஜித் பேசும், “உங்க மேல கொல கோவம் வரணும்” என ஒரு வசனமும், பின்னர் டிரைலரின் முடிவில், “பேரு தூக்குதொர, தேனி மாவட்டம், ஊரு கொடுவிலார்பட்டி, பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா, ஒத்தைக்கு ஒத்தை வாடா” மீசையை நீவிவிட்டு சவால் விடுகிறார். இது ‘பேட்ட’ ரஜினியின் வசனத்திற்கு பதிலடி கொடுப்பதாகவே உள்ளது.

நகைச்சுவையில் ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா கலக்குவார்கள் எனத் தெரிகிறது.

அஜித் ரசிகர்கள் எந்த மாதிரியான ஒரு டிரைலரை எதிர்பார்த்தார்களோ அப்படிப்பட்ட ஒரு டிரைலரைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா. கிராமத்து பின்னணியில் கலர்புல்லாக அமைந்திருக்கிறது.

இமானின் பின்னணி இசையும் காட்சிக்குத் தக்கபடி மிரட்டலாக இருக்கிறது.

பொங்கல் 2019 வெளியீடு என்றுதான் டிரைலரில் கூறியுள்ளார்கள். ஆனால் சத்யஜோதி பிலிம்ஸின் டுவிட்டர் பக்கத்தில், படம் ஜனவரி 10-ம் தேதி வௌியாகிறது என அறிவித்துள்ளனர். இதன்மூலம் ‘பேட்ட’ வெளியாகும் ஜனவரி 10ம் தேதியே ‘விஸ்வாசம்’ வெளியாகிறது.

விஸ்வாசம் – ரசிகர்களுக்கான முழு விருந்து

Tags
Show More
Back to top button
Close
Close