இயக்குநர் சிவா – நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

விஸ்வாசம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள நிலையில், படத்தை கொண்டாட அஜித் ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர். பிரமாண்ட கட்-அவுட், பேனர் என்று பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.

Advertisement

விஸ்வாசம் ட்ரெய்லர் ரிலீஸான 12 நிமிடத்தில் அதை யூடியூப்பில் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 25 நிமிடத்தில் 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 75 நிமிடத்தில் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

Share