சிறப்பு கட்டுரைகள்

சவால்களை சமாளித்து சாதனையை நெருங்குகிறது புனித கங்கை மீட்பு திட்டம்: காங்கிரஸ் அரசால் முடியாது என கைவிடப்பட்ட திட்டத்தை சாதித்து காட்டும் மோடி சர்க்கார்!

பல்லாயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்தும், வெற்றி காணவே முடியாது என முந்தைய காங்கிரஸ் அரசுகளால் கைவிடப்பட்ட கங்கை சீரமைப்பு திட்டம், தற்போதைய மோடி சர்க்காரால் மீண்டும் தொடங்கப்பட்டு முக்கிய நிலையை அடைந்துள்ளது. பெருமளவில் தற்போது உயிரி மாசுபாடு குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

கங்கை நதியை சுத்தப்படுத்தி, சீரமைத்து அதன் தொன்மையான புனிதத்தை மீட்போம் என முதன் முதலாக சவால் விட்டு அதற்கான திட்டத்தை 1986-ஆம் ஆண்டு தொடங்கியவர் அப்போதைய பிரதமர் இராஜீவ் காந்தி. பிரதமரை தலைவராகவும், கங்கை பாயும் மாநிலங்களின் முதலமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு தேசிய கங்கை பாசன மேலாண்மைத் துறை அப்போது அமைக்கப்பட்டது. காங்கிரஸ் உட்பட முந்தைய அரசுகள் 1985-ஆம் ஆண்டு மற்றும் 2014-ஆம் ஆண்டுகளுக்கு இடையே கங்கை துப்புரவுத் திட்டங்களில் ₹4,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளன. கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய்கள் காங்கிரஸ் அரசுகளால் கொட்டப்பட்டும் எந்த பயனும் ஏற்படவில்லை, எந்த முன்னேற்றமும் இல்லை.

2011-ஆம் ஆண்டு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்(CPCB) கணக்கெடுப்பின் படி, கங்கை நதிக்கரையோரம் உள்ள கான்பூர் நகரத்தில் உள்ள 5.5 லட்சம் வீடுகளில் 1.76 லட்சம் வீடுகள் மட்டுமே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களின் கழிவுகள் சுத்திகரிக்கபடாமல் நேரடியாக கழிவுநீர் விநியோகத்தில் கலக்கின்றன. அதேபோல, பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசியில் 20 முதல் 30 சதவிகிதம் வீடுகளுக்கு மட்டுமே கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி உள்ளது. சுமார் 70 சதவீதம் பேர்களுடைய கழிவு நேரடியாக கங்கையில் கலப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்(CPCB) 2013-ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, கங்கை நதியின் கரையோரங்களில் உள்ள 50 நகரங்களில் இருந்து வெளியேற்றப்படும் உள்ளூர் கழிவுப் பொருள்கள் மட்டும் 2,723 மில்லியன் லிட்டர் (MLD) ஆகும் என்றும் மொத்த மாசுபாட்டில் இது 85 சதவீதமாகும் என கூறியது. இந்த மாசுபாட்டால் கங்கையை நம்பி வாழும் சுமார் 140 வகையான நீர் வாழ் உயிரினங்களும் ஏராளமான ஊர்வன விலங்குகளும் மட்டுமல்ல, கங்கை நதிக்கரையோரங்களில் வாழும் சுமார் 30 கோடி மக்களும் நேரடியாக பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்தன. மேலும் கங்கையிலிருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு எடுத்து செல்லப்படும் தண்ணீர் குடிநீராக பயன்படுத்த தகுதியில்லை என்றும், அந்த நீர் பயன்படுத்த முடியாத நீர் எனவும் ஆய்வு முடிவுகளில் தெரிய வந்தன.

இந்த நிலையில் கங்கை நதியின் அசுத்தம் குறித்து மக்கள் கவலை கொள்ள தொடங்கினர். 1986-ஆம் ஆண்டே இராஜீவ் காந்தியால் உறுதி அளிக்கப்பட்டும், பல அரசுகளால் பல்லாயிரம் கோடி செலவழிக்கப்பட்டும் கங்கை மேலும் அசுத்தமாகியுள்ளது என்ற தகவல் பரவியதால் பொது மக்கள் அரசியல்வாதிகள் மீது உண்மையில் கோபம் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில்தான் 2014-ஆம் ஆண்டு பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும், பா.ஜ.க-வின் வாரணாசி நாடாளுமன்ற வேட்பாளராகவும் அங்கு சென்ற மோடி அவர்கள் பிரம்மாண்டமான பேரணியில் கலந்துக்கொண்டார். இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட அந்த பேரணியில் கங்கையை சீரமைத்து நதியை மீண்டும் புனிதமாக்குவேன் என தேர்தல் வாக்குறுதி அளித்தார். மக்கள் அவரது பேச்சை நம்பினர். இலட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். பிரதமராகவும் பதவி ஏற்றார். ஆட்சிக்கு வந்ததும் அதற்க்கென ஒரு தனி அமைச்சகத்தையே அறிவித்தார்.

இத்திட்டத்துக்கென 2015 வரவு செலவுத் திட்டத்தில் ₹20,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இதுவே மோடி அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக நிரூபித்தது. கங்கையை சுத்திகரிப்பதற்கு ஒரு சிறந்த அணுகுமுறையை வழிவகுத்து கொடுத்தது. முடியாது என்று காங்கிரஸ் அரசுகளால் கைவிடப்பட்ட இந்த திட்டம் சோதனைகளை கடந்து, சாதனைகளை நெருங்கி வருகிறது. இந்தத்திட்டம் முழுமையாக நடைபெறுவதற்கான அனைத்து அடிப்படை வசதிகள், தேவைகளை தற்போது நிறைவேற்றி உள்ளது. இது மட்டுமல்லாமல் பல்வேறு கோர்ட் வழக்குகளையும் அதிக அளவில் சந்தித்தது. இந்த சவால்களை எல்லாம் தாண்டி திட்டம் ஒரு உறுதியான வளர்ச்சிக்கு வந்துள்ளது.

தற்போதைய மோடி சர்க்கார் கடந்த நான்கு ஆண்டுகளில் 254 திட்டங்களில் ₹20,000 கோடி அனுமதி அளித்துள்ளது. இந்த 254 திட்டங்களில் 133 கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள், 11 இடங்களில் பயோமெரிடேஷன் சுத்தகரிப்பு மையம், கிராமப்புற துப்புரவு திட்டங்கள், 64 இடங்களில் அசுத்தமற்ற நீராடும் இடங்கள், 6 இடங்களில் உயிர்-பன்முகத்தன்மை மற்றும் 16 வனப்பகுதி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கங்கை நதிக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 97 நகரங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் அறியப்பட்டு அவற்றை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அகற்றி தூய்மை இந்தியா திட்டம் மூலம் சீரமைத்து உள்ளனர். கங்கை நதியோரத்தில் 2000 கி.மீ நீளம் நீண்ட சாலையும் அமைக்கப்பட்டு இப்பணிகளை விரைவு படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் கங்கையில் பல்வேறு துணை ஆறுகளும் கலக்கின்றன. யமுனா உட்பட அந்த ஆறுகளின் மூலமும் கங்கையில் மாசு கலந்துவிடக்கூடாது என்பதற்காக 30 துணையாறுகள் மேம்பாட்டுத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 16-ஆம் தேதி பிரயாகை சென்ற பிரதமர் மோடி 175 கி.மீ நீள கழிவு நீர் கால்வாய் திட்டம் ஒன்றை தொடக்கி வைத்தார்.

மேலும் கங்கை நதியோரம் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை நான்காயிரம் ஆகும். இந்த கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் 27 லட்சம் கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் திறந்த வெளியில் மலம் கழிப்பது வெகுவாக குறைந்துள்ளதால் கங்கையில் குறையும் மாசுபாடு குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

bank at Bithoor’s showed the level of faecal coliform was 49 per 100 ml, 49 per 100 ml and >1600 per 100 ml, respectively. Similar improvement was seen Rajghat in Kannauj, Dalmau in Raebareli and other places.

கடந்த நான்கரை ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த தொடர் முயற்சிகளின் பலனாக கான்பூர் அருகே பித்தூர் பகுதியில் செய்யப்பட்ட நுண்ணுயிர் தொடர்பான ஆய்வுகள்படி 2014-ஆம் ஆண்டில் 100 மில்லி நீரில் 3500 நுண்ணுயிர் கிருமிகள் இருந்ததாகவும் ஆனால் அது அனுமதிக்கப்பட்ட அளவை விட 1000 நுண்ணுயிர்கள் அதிகமென்றும் தெரிய வந்தது. அவை கடந்த 2017-ஆம் ஆண்டின் ஆய்வின்போது ராஜ்காட், கன்னூஜ், ரேபரேலி பகுதிகளில் 100 மில்லிக்கு 49 தற்போது குறைந்துவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் ஆரம்பத்தில் உள்ள பல பிரச்சினைகள் தற்போது பெருமளவில் குறைந்து விட்டது. எந்த பிரச்சினைகள் மிக சவாலான பிரச்சினைகளோ அவை அடிப்படையில் தீர்க்கப்பட்டன. எனவே இத்திட்டம் ஒரு உறுதியான வளர்ச்சியை அடைந்துள்ளது. வெற்றி காணவே முடியாது என கைவிரிக்கப்பட்ட திட்டத்துக்கு தற்போது ஒரு நம்பிக்கை கிடைத்துள்ளது எனவும் தான் வாக்குறுதி அளித்த திட்டம் நிச்சயம் குறித்த காலத்தில் நிறைவேற்றப்படும் என பிரயாகை கூட்டத்தில் பிரதமர் கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close