சிறப்பு கட்டுரைகள்

4 ஆண்டுகள்; 55 மாதங்கள்; 92 நாடுகள்; ₹2,021 கோடி செலவு, ₹10 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்ப்பு – பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களை கொச்சைபடுத்தியவர்களுக்கு சவுக்கடி

இந்திய அரசில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பிரதிபலிப்பு கடல் கடந்தும் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. முந்தைய அரசுகள் போலல்லாது, இந்தியாவின் வல்லமையை உலகிற்கு உணர்த்துவதும், உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிப்பதும் பிரதான நோக்கமாகக் கொண்ட அரசாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி அரசு இருப்பதே இதற்குக் காரணம். மோடி பிரதமரானவுடன் அவர் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதை சுற்றுலா நோக்குடன் எள்ளி நகையாடுவோர் உள்ளனர். ஆனால், வெளிநாட்டுப் பயணங்களின் பயன்பாடு பற்றி அறியாத, வெளியுறவுக் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சியில் கொண்டுள்ள பங்களிப்பை அறியாதவர்கள் தான் அவ்வாறு பேசுவர்.

மோடி பயணம் செய்துள்ள நாடுகளின் பட்டியலைக் காணும் எவரும், தெளிவான இலக்குடன் அவரது பயணம் அமைந்து வருவதை உணர்வர். அவரது முதல் வெளிநாட்டுப் பயணம், நமது நெருங்கிய நட்பு நாடான பூடானுடன் (2014, ஜூன் 16-17) நிகழ்ந்தது. அதன்மூலம், தனக்கு மிகவும் நம்பிக்கையான பூடான் நாட்டின் மீது சீனாவின் வல்லாதிக்கம் செலுத்த முடியாதவாறு பாசவலையை இறுக்கியது இந்தியா. அதற்கு பிறகு தொடர்ச்சியான தனது பயணங்கள் மூலமாக பல இலட்சம் கோடி அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளார் பிரதமர் மோடி.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை ₹2,021 கோடி செலவாகி இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 2009 முதல் 2018-ஆம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருக்கும்போது, இந்திய பிரதமர்களால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பயணங்கள் பற்றிய விவரங்களை வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்த பொழுது இந்த விவரம் வெளியானது.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 113 நாடுகளுக்கும் மேல் பயணம் செய்து உள்ளார்.  இதுவரை பிரதமர் மோடி 92 நாடுளுக்கு பயணம் செய்து உள்ளார்.  மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 93 நாடுகளுக்கு பயணம் செய்து உள்ளார். மோடி 5 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில்  92 நாடுகளுக்கு  பயணம் செய்து உள்ளார். மன்மோகன் சிங் தனது 2 ஆட்சி காலங்களில்(10 ஆண்டுகளில்) 93 நாடுகள் பயணம் செய்து உள்ளார். இந்திரா காந்தி  தனது 3 ஆட்சிகாலங்களில்(15 ஆண்டுகள்) 113 நாடுகளுக்கு  பயணம் செய்து உள்ளார். மோடியின் இந்த 92 நாடுகள் பயணத்திற்கு சுமார் ₹2,021 கோடி செலவாகி உள்ளது. இதனை ஒப்பிடும்போது மோடி தனது 5 ஆண்டுகளுக்கும் குறைந்த காலத்தில் பயணம் செய்து உள்ளார். காங்கிரஸ் ஆட்சியின் போது  மன்மோகன் சிங்கின் 50 வெளிநாட்டு பயணங்களுக்கு ₹1350 கோடி செலவழிக்கப்பட்டு இருந்தது.

சிக்கனமான பிரதமர் மோடி மட்டுமே

மோடி பிரதமர் ஆனதிலிருந்து 55 வெளிநாடுகளுக்கு  சென்றுள்ளதாகவும் இதில் சில நாடுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை சென்றுள்ளதாகவும் கூறினார். நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை ₹2,021 கோடி செலவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் அதிக முதலீடு செய்த முதல் 10 நாடுகளுக்கும் பிரதமர் மோடி சென்றிருந்ததாகவும், மோடியின் வெளிநாட்டு பயணங்களால் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் 13 ஆயிரத்து 607 கோடி டாலர்கள்(ஏறக்குறைய ₹10 இலட்சம் கோடி) அன்னிய நேரடி முதலீடாக வந்துள்ளதாகவும், ஆனால் இது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 2011 முதல் 2014 கால கட்டத்தில் 8 ஆயிரத்து 184 கோடி டாலராக(ஏறக்குறைய 5 இலட்சம் கோடி ரூபாய்) மட்டுமே இருந்தது. 92 நாடுகளுக்கு மோடி ₹2,021 கோடி செலவிட்டால், ஒரு நாட்டிற்கான சராசரியான செலவு ₹22 கோடி. 50 நாடுகளுக்கு மன்மோகன் சிங்கின் பயணத்திற்கான செலவு ₹1,350 கோடி செலவாகும். இது ஒரு நாட்டிற்கான சராசரியான செலவு ₹27 கோடி ஆகும். ஒவ்வொரு பயணத்திலும் பிரதமர் மோடியின் பயண நாட்களின்  எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் செலவை குறைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது என பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறாக, மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இலக்குடன் கூடியதாகவும், ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மேலும் உலக அரங்கில் வலுப்படுத்துவதாகவுமே அமைந்து வருகின்றன. இரு தரப்பு வர்த்தகம், பாரதிய கலாச்சார உறவு, பாதுகாப்பை மேம்படுத்துதல், இந்தியாவில் செல்வந்த நாடுகளின் முதலீடு, சிறிய நாடுகளுக்கு இந்தியாவின் உதவி என மோடியின் பயணத் திட்டத்தில் தெளிவான வரையறைகள் காணப்படுகின்றன. நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அடியொற்றி நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் செல்லும் இந்தியத் தலைவரின் எண்ணங்கள் பலிதமாகும் நாள் வரும்போது, உலகிற்கே வழிகாட்டும் திறனும் இந்தியாவுக்கு வாய்க்கும்.

Tags
Show More
Back to top button
Close
Close