தமிழ் நாடு

“வாரிசு அரசியல் இல்லா தமிழக அரசியல் களம்” திட்டம் தீட்டிய அமித் ஷா, செயல்படுத்திய தமிழக பா.ஜ.க இளைஞரணி 

வாரிசு அரசியல் இல்லாத அரசியல் பின்புலம் இல்லாத இளம் தலைவர்களை தமிழகத்தில் உருவாக்க பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷாவின் ஆலோசனைப்படி பா.ஜ.க இளைஞரணியின் மண்டல மாநாடு இன்று சேலத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்டல் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.

ஒட்டுமொத்த திராவிட கட்சிகளுக்கு சவலாக தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து மண்டல் ரீதியாக இளைஞரணியின் இளம் தலைவர்கள் வருகை புரிந்தனர். திராவிட கட்சிகளில் கூட ஒன்றிய அளவில் இளைஞரணி நிர்வாகிகள் இல்லாத போது தமிழகத்தில் பா.ஜ.க எங்கு இருக்கிறது என்று கேட்ட திராவிட கட்சிகளுக்கு சவால்விடும் படி நடந்து முடிந்துள்ளது பா.ஜ.க தமிழக இளைஞரணியின் மண்டல மாநாடு.

இக்கூட்டத்தில் ஒரு கோடி இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை சந்திப்பது, மோடி நமோ ஆப் பதிவிறக்கம் செய்வது, தமிழகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நடத்துவது, இளைஞர் பாராளமன்ற நிகழ்வுகளை பல்வேறு இடங்களில் நடத்துவது போன்ற பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

“ஒட்டுமொத்தமாக தமிழகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு சேலம் இளைஞரணி நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற டிசம்பர் 4 முதல் இன்று வரை 26 நாட்களாக ஒத்துழைப்பு நல்கிய மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று பெருமிதத்துடன் கூறினார் பா.ஜ.க இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் செல்வம்.

இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் “தேர்தலுக்கு நாங்கள் மட்டுமல்ல, எங்களது இளைஞர் அணியினரும் தயாராக உள்ளனர்” என கர்ஜித்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close