செய்திகள்

அப்துல்கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆக காங்கிரஸ் முட்டுக் கட்டை போட்டது: மகாத்மா காந்தி பேரன் கருத்து

மஹாத்மா காந்தியின் பேரனான ராஜ்மோகன் காந்தி, (வயது 83) எழுதியுள்ள நுாலில் அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆவதற்கு பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தும், காங்கிரஸ் ஆதரவளிக்காதால் கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆகாமலேயே போய்விட்டது என குறிப்பிடப்பட்டு உள்ளது.

பிரபல வரலாற்று ஆய்வாளரும், மஹாத்மா காந்தி மற்றும் நாட்டின் கடைசி கவர்னர் ஜெனரலான, ராஜாஜியின் பேரனுமான, ராஜ்மோகன் காந்தி, 17ம் நூற்றாண்டில் இருந்து தென் இந்தியாவின் வரலாறு என்ற புதிய நுாலை எழுதிஉள்ளார். அந்த நூலில், கடந்த, 2002ல் நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, அப்துல் கலாமின் பெயரை, சமாஜ்வாதி நிறுவனரும், முன்னாள் ராணுவ அமைச்சருமான முலாயம் சிங் முன்மொழிந்தார். அப்போது பிரதமராக இருந்த, பா.ஜ.,வின் வாஜ்பாய், பார்லியில் போதிய பலம் இல்லாததால், தனியாக வேட்பாளரை அறிவிக்காமல், கலாமை ஆதரித்தார். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு அளித்ததால், கே.ஆர். நாராயணனுக்குப் பின், அப்துல் கலாம், ஜனாதிபதி ஆனார். கடந்த, 2007ல் மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைக்காததால், மாணவர்களை சந்திக்கும் பயணத்தை கலாம் மேற்கொண்டார்.

அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களின் ஜனாதிபதியாக இருந்த கலாமுக்கு, 2012ல் மீண்டும் ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு கிடைத்தது.பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன.ஆனால், காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை. அதனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, கலாம் மறுத்து விட்டார். காங்கிரசின் இந்த நடவடிக்கையால் கலாம் ஜனாதிபதியாக ஆக முடியாமல் போய் விட்டது என்றும் அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close