தமிழ் நாடு

கற்கள், செருப்புகள் கொண்டு தாக்கிய தி.மு.க-வினர், கலங்காமல் உறுதியுடன் விருதுநகரை முதன்மை மாவட்டமாக மாற்றி சாதித்து காட்டிய நிர்மலா சீதாராமன் – தி.மு.க-வின் தமிழக விரோத போக்கிற்கு கொடுக்கப்பட்ட சவுக்கடி

அடுத்த 5 ஆண்டுகளில்(2018-2022) வளர்ச்சிமிகு இந்தியாவை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கோடு ஒத்திசையும் வகையில் மத்திய அரசு இந்தியாவில் 115 பின்தங்கிய மாவட்டங்களை 2022-ம் ஆண்டிற்குள் துரிதமாக மேம்படுத்திட தேர்வு செய்துள்ளது. நாட்டின் பின் தங்கிய மாவட்டங்களின் மேம்பாடு மிகவும் அவசியமான ஒன்று என்று உணர்ந்துள்ள மத்திய மோடி அரசு மத்திய திட்டக்குழு நிதி ஆயோக் மூலமாக வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கவும் அதை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது.

ஓரளவு தொழில் ஆதாரங்கள் இருந்தும், சிறப்பான தொழிலாளர்கள் இருந்தும் கால மாறுதலுக்கு ஏற்ப இந்த மாவட்டங்கள் மட்டும் பெரிய வளர்ச்சி பெறாமல் மிகவும் பின் தங்கியிருப்பதாக அறியப்பட்டுள்ள இந்த மாவட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி பல வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அனைத்து வசதியுமுள்ள மாவட்டமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் நடைபெற்ற அதற்கான முதல் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து பல பணிகள் இந்த திட்டத்தின் கீழ் விருதுநகரின் முடுக்கி விடப்பட்டது.

“விருதுநகர் மாவட்டம் பின்தங்கிய மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட அனைத்து நடவடிக்கைகளையும் தான் எடுக்க இருப்பதாக” முதல் கூட்டத்தின் முடிவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

இதற்கிடையில் இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக் கொண்டதற்கு தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தான் கூறியபடியே, விருதுநகரை பின்தங்கிய மாவட்டம் பட்டியலில் இருந்த அகற்ற அனைத்து முயற்சிகளையும் நிர்மலா சீதாராமன் எடுத்து அதில் சாதித்தும் உள்ளார் என்று நிதி ஆயோக்கின் ஆய்வு மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதும் 112 பின்தங்கிய மாவட்டங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி, விருதுநகர் மாவட்டம் முதன்மை இடத்தை பெற்றுள்ளது. கல்வி, சுகாதாரம், விவசாயம், அடிப்படை உள்கட்டமைப்பு, நிதியியல் சேர்த்துக் கொள்ளல் மற்றும் திறன் வளர்ச்சி ஆகியவற்றில் 49 மாவட்டங்களில் இந்த மாவட்டங்கள் அடைந்த முன்னேற்றங்கள், ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்ட 1,00,000 குடும்பங்களை உள்ளடக்கிய இரண்டு ஆய்வாளங்களில் இந்த முன்னேற்றங்கள் பிரதிபலித்ததாக நிதி ஆயோக் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கல்வி மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு குறியீடுகளின் விருதுநகர் வியக்கத்தகு முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக நிதி ஆயோகின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான்ட் கூறியுள்ளார்.

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த மே மாதம் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதே பின்தங்கிய மாவட்டங்களை 2022-ம் ஆண்டிற்குள் துரிதமாக மேம்படுத்திடும் திட்டத்திற்காக மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றார். அப்போது அங்கு கூடிய தி.மு.க-வினர் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியது மட்டுமின்றி நிர்மலா சீதாராமன் சென்ற காரின் மீது கற்கள் மற்றும் செருப்புகளை வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க-வினரின் மதிகெட்ட அரசியலை கருத்தில் கொள்ளாமல் விருதுநகரை முதன்மை மாவட்டமாக்கி சாதித்து காட்டியுள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவருக்கு சபாஷ்!

Tags
Show More
Back to top button
Close
Close