தமிழ் நாடு

அசூர வளர்ச்சி காணும் தமிழகம் – தமிழகத்தில் கால் பாதித்த ‘ஆப்பிள்’ நிறுவனம்.!

சென்னையில் ஆட்டோமொபைல் உற்பத்தி அதிகமாகச் செய்யப்பட்ட வந்த நிலையில் சமீபகாலமாக எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திகளும் அதிகரித்து வருகிறது. அடுத்த ஆண்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில், வெவ்வேறு விதமான ஐபோன்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை அறிவித்துள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில்‌ நோக்கியா ஆலை இருந்த இடத்தில்‌ ஃபாக்ஸ்கான் என்ற நிறுவனம் இந்த தயாரிப்பை நடத்தவுள்ளது. இந்த நோக்கியா ஆலை 2014-ம் ஆண்டு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்போது பலரும் வேலையிழந்தனர். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியாக ஃபாக்ஸ்கானுடன் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது அரசு. தைவானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறது. 15 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வரும் ஃபாக்ஸ்கான் ஆலையில் 90 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். ஃபாக்ஸ்கான் ஆலையில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த செல்போன்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, இதற்காக தமிழக அரசின் ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் தயாரிக்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் நிறுவன வளாகத்தில் ஏற்கனவே இதற்கென தனி ஆலை உருவாக்கப்பட்டு உள்ளது. அங்கு தட்டுப்பாடுக்கு ஏற்ப புதிய ஐபோன் மாடல்கள் தயாரிக்கப்பட இருக்கிறது.

அடுத்த ஆண்டு முதல் புதிய ஐபோன்களின் உற்பத்தி சென்னை ஃபாக்ஸ்கான் ஆலையில் தொடங்கப்படுகிறது. ஐபோன்கள் விலை உயர்ந்த சாதனம் என்பதால் இவை சென்னையில் தயாரிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம்
ஏற்கெனவே ஷியோமி உட்படப் பல முன்னணி நிறுவனங்களுக்கு மொபைல் தயாரித்துத் தருகின்றன. ஐபோன் தயாரிப்புக்காக அந்நிறுவனம் சுமார் 2,500 கோடி ரூபாயை இங்கு முதலீடு செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படும்.

Tags
Show More
Back to top button
Close
Close