தமிழ் நாடு

சிறுமியை கூட்டாக கற்பழித்து கொன்ற முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ ராஜ்குமார் – 10 ஆண்டுகள் சிறை #பாலியல்குற்றவாளிதிமுக ?

கேரளா, இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே பம்பனார் லான்ட்ரம் எஸ்டேட்டைச் சேர்ந்தவர் சந்திரன் மகள் சத்யா(15 வயது). இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் 22 அன்று வீட்டு வேலைக்காக பெரம்பலூர் தொகுதி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த சிறுமி திடீரென உடல்நிலை மோசமான நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்யா பின்னர் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். அந்த சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்ட உறவினர்கள், உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சத்யா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் பல வழிகளில் துன்புறுத்தப்பட்டு இறந்ததாக முதல் கட்ட தகவல் அறிக்கையில் தெரிய வந்தது. இச்சூழ்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக, பெரம்பலூர் தொகுதி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் இன்றிரவு போலீசில் சரண் அடைந்தார்.

இந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் பெரம்பலூர் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ ராஜ்குமார் உள்ளிட்ட இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை இன்று சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

சென்ற மாதம் 16 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்த கம்பம் நகர தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ஷேக் அப்துல்லா 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close