இந்தியா

பிரதமர் மோடி அரசின் திட்டங்களின் உடனடி நிலையை மக்கள் அறியும் வகையில் அரசின் புது தொழில்நுட்பம்..!

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு முன்னதாக நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை புத்தகமாக வெளியிடப்பட இருக்கிறதாக கடந்த ஏப்ரலில் கூறப்பட்டது.கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து பாரதிய ஜனதா தேர்தலை சந்தித்தது. அப்போது பல்வேறு வித்தியாசமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. 4 ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் இந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இந்த நிலையில் 4 ஆண்டு ஆட்சியில் செய்துள்ள சாதனைகள் பட்டியலை வெளியிட பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்னர் திட்டமிட்டு இருந்தார். இதற்காக அனைத்து துறைகளிலும் 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த பட்டியலை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படும் வகையில் இந்த பட்டியலில் விரிவான அம்சங்கள் விளக்கப்பட்டிருக்கும். இதை புத்தகமாக தயாரித்து அனைத்து பகுதி மக்களுக்கும் சென்றடையும் வகையில் வினியோகிக்கவும் பத்திரிகைகளில் விரிவாக விளம்பரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அரசுத் திட்டங்களின் உடனடி நிலையை மக்கள் அறியும் வகையில் மத்திய அரசு தகவல் தளங்களை உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் மத்திய அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்கள், அதன் மதிப்பீடு, தற்போதைய நிலை, பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் காலம், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட விவரங்கள் வீடியோ சுவர் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அனைவருக்கும் வீடு, ஸ்மார்ட் சிட்டி, சுவச் பாரத் போன்ற திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறை, அதன் இருப்பிடங்கள் குறிக்கும் செயலி உள்ளிட்டவையும் மக்கள் எளிதாக அறியும் வகையில் வடிவமைக்கப்படும் என சொல்லப்படுகிறது

Tags
Show More
Back to top button
Close
Close