தமிழ் நாடு

ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரில் சீறி பாயும் காளைகள்

அலங்காநல்லூரில் வரும் ஜனவரி 17 ம் தேதி ஜல்லிக்கட்டு – தமிழக அரசு ஆணை வெளியீடு தமிழக அரசின் தொடர் முயற்சி மற்றும் மத்திய அரசின் சீரிய நடவடிக்கையால் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக் கட்டு இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 17ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கவுள்ளது. மதுரை மாவட்டத்தில் மற்ற இடங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்க்க பெருமளவில் மக்கள் திரண்டு வருவார்கள். வெளிநாட்டில் இருந்தும் அங்கு நடக்கும் ஜல்லிக்கட்டை காண மக்கள் வருவார்கள். இதேபோல், மற்ற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படுகிறது.

அவ்வகையில் வரும் 2019 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரி 15-ம் தேதி மதுரை – அவனியாபுரத்திலும், ஜனவரி 16-ம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

Tags
Show More
Back to top button
Close
Close