தமிழ் நாடு

அண்டிப்பிழைப்பு நடத்தும் தி.முக ஓட்டுக்காக போடும் வெளிவேஷம் – உணரப்போகிறார்களா தமிழ் மக்கள்?

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் நடக்க வாய்ப்பு இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் சந்திக்க தி.மு.க தயாராகி வருகிறது.

தமிழ் நாட்டில் உள்ள 39 தொகுதி, புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை தி.மு.க நியமித்துள்ளது. இது தவிர, மொத்தம் உள்ள 65 ஆயிரம் பூத்களுக்கும் தலா 21 பேர் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரசுடன் கூட்டணி அமைவது உறுதி என்று கூறப்படுகிறது. கூட்டணியில் இணையும் மற்ற கட்சிகள் எவை என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில் தி.மு.க சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் கசிந்துள்ளன. இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் கட்சியிலும், மக்களிடமும் செல்வாக்கு உள்ளவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ய தி.மு.க மேலிடம் முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகள் பற்றிய விவரங்கள் தெரிய வந்துள்ளன.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்தது. போராட்டத்துக்கும் ஆதரவு அளித்தது. இதையடுத்து நடந்த கருத்துக் கணிப்பில் கனிமொழி இங்கு போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர தூத்துக்குடி தொகுதியில் நாடார்கள் ஓட்டு அதிகம் உள்ளது. கிறிஸ்தவர்கள் ஆதரவும் இருக்கிறது. இதற்காக கிறிஸ்தவ இன மக்களிடம் இணக்கமான போக்கை கடைபிடித்து வருகிறது தி.மு.க. இந்து பண்டிகை வரும் பொழுது மட்டும் திராவிட கொள்கை பேசி கொச்சைப்படுத்தும் தி.மு.க ஓட்டு என்று வந்தவுடன் மற்ற மதங்களை தூக்கி பிடித்து வருகிறது. அங்கும் திராவிட கொள்கை பேசினால் கைவசம் இருக்கும் வாக்குவங்கியும் பறிபோய் விடும் என்ற பயத்தில், தோளோடு தோள் சேர்த்து உறவாடி வருகிறது.

இதனை உறுதிபடுத்தும் வகையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தாங்கள் தி.மு.க-விற்கு ஆதரவு அளிக்க இருப்பதாக தேவாலயங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. எதை எதிர்பார்த்து தி.மு.க காய் நகர்த்தியதோ அது நடந்து விட்ட குதூகலத்தில் மற்ற கட்சிகளை வசைபாடி வருகிறது. மக்களுக்கு  நலத்திட்டங்களை கொண்டு வர அரசாங்கம் அமைய வேண்டும் என்று ஜனநாயகத்தின் அடிப்படை இருக்கும் பொழுது, இப்படி அண்டிப்பிழைக்கவும் அரசியல் மாறிவிட்டதை என்றைக்கு தமிழ் மக்கள் உணர போகிறார்களோ.

Show More
Back to top button
Close
Close