செய்திகள்

ராமர் கோவில் கட்டினால் தான் வாக்களிப்போம் : மத்திய அமைச்சர் கூட்டத்தில் உத்திரபிரதேச வாலிபர்கள் கூச்சல்

உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிய போது, அங்கிருந்த இளைஞர்கள், ராமர் கோவில் கட்ட வேண்டும் எனக் கோரி தொடர்ந்து முழக்கமிட்டனர். நீங்கள் கூச்சல் போடுவதை நிறுத்தினால் தான் நான் பேசுவேன் இல்லை என்றால் கிளம்பிவிடுவேன் என அமைச்சர் எச்சரித்தும் வாலிபர்கள் அமைதியானார்கள். அதன் பிறகே கூட்டம் நடைபெற்றது.

லக்னோவில் மாநில அரசு சார்பில் நடைபெற்ற யுவகும்ப் என்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அங்கிருந்த இளைஞர்கள் பலர், ராமர் கோவிலை கட்டவேண்டும் என்றும், ராமர் கோவிலை கட்டுபவர்களுக்கே தங்களது வாக்கு என்றும் மிகவும் சப்தமாக முழக்கமிட்டனர். அவர்களை அமைதியாக இருக்குமாறு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியும், இளைஞர்களின் முழக்கம் சுமார் 4 நிமிடங்களுக்கு நீடித்தது. அப்போது, பேச்சை நிறுத்தினால் மட்டுமே, தாம் பேசப் போவதாக ராஜ்நாத் சிங் கூறியதால், இளைஞர்கள் அமைதியானார்கள். அதன்பிறகே கூட்டம் சுமூகமாக நடைபெற்றது.

With Inputs from Polimer

Tags
Show More
Back to top button
Close
Close