கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினி, சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி இயக்கத்தில் “பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது. தொடர்ந்து ரஜினி திரைப்படங்கள் வெளியாவதால் ரஜினி ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

மோஷன் போஸ்டர், முதல் பார்வை, டீசர் உள்ளிட்டவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து, பேட்ட திரைப்படத்தின் ட்ரைலர் டிசம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையொட்டி ரஜினி ரசிகர்கள் “பேட்ட” கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Share