இந்தியா

வாஜ்பாயால் தொடங்கி வைக்கப்பட்ட ஆசியாவின் மிக நீளமான போகிபீல் பாலம் : அவரது பிறந்த நாளில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்

2002-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் தொடங்கி வைக்கப்பட்ட போகிபீல் பாலத்தை இன்று அவரது 94 வது பிறந்த நாளை முன்னிட்டு நமது பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார்.

4.94 கி.மீ. நீளம் கொண்ட போகிபீல் பாலம், அசாமின் கிழக்குப் பகுதி மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இப்பாலம் ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் ஆகும். இதில், மேலே மூன்று வழிச் சாலையும் கீழே இரண்டு வழி ரயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பாலம் பிரம்மபுத்திரையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கிறது.

1997-ல் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவில் அடிக்கல் நாட்டப்பட்ட போகிபீல் பாலம், 2002-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு முறை காலக்கெடுக்களைக் கடந்த பாலம், கடந்த டிசம்பர் 3-ம் தேதி முதன்முதலாக ரயில் போக்குவரத்துக்காக வெள்ளோட்டம் விடப்பட்டது. வாஜ்பாய் பிறந்த தினமான இன்று ஆசியாவின் மிக நீளமான ரயில் – சாலை பாலமான போகிபீல் பாலத்தை, பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close