இந்தியா

இந்தியர்களுக்கு வரப்பிராசதமான பிரதமர் மலிவு மருந்தகம் திட்டம்  – ஒரு பார்வை 

இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கழித்தும் கூட, நம் நாட்டில் 60 சதவீத மக்களுக்கு முத்திரை படைத்த மருந்துகளை வாங்க கூடிய தன்மை இல்லாமலே இருந்தது. ஆனால், இந்தியா இந்த உலகிலேயே உலகம் தரம் வாய்ந்த முத்திரை படைத்த மருந்துகளை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் மொத்தமாக 200 நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இவ்வளவு பெரிய உலகத்தரம் வாய்ந்த ஏற்றுமதி சந்தை இருந்தும், நம் ஊரில் வாழும் 60 சதவீத மக்களுக்கு அதிக விலையால் உலகத்தரம் வாய்ந்த மருந்துகளை வாங்கும் திறனில்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

இந்த பிரிவை சுருக்கி, மருந்துகள் அனைவருக்கும் கிடைக்குமாறு வழிவகுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மலிவு மருந்தகம் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும், ஜாதி, மதம், பொருளாதாரம் ஆகிய கோணங்களில் பாகுபாடுபாக்காமல் அனைவருக்கும் மலிவான விலையில் மருந்துகளை கொண்டு சேர்க்கவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள். இந்த திட்டத்தின் மூலம் இயங்கப்படும் மருந்துக்கடைகளில் வழக்கமான விலையை விட 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைவாக விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்களின் பணம் 400 கோடி அளவில் குறைக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது.

இவ்வாறு மருந்துகளின் விலை குறைவாக இருப்பதன் மூலம், ஒட்டுமொத்த மருத்துவ சிகிச்சையின் விலை குறைந்து ஏழை மக்களுக்கு மிகபயனுள்ளதாக இந்த திட்டம் விளங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்பம்சம், இந்த திட்டம் சிறு தொழிலதிபர்களுடம் சேர்ந்து செயல்படுத்தப்படுகிறது. தனியாக மருந்து கடைகள் நடத்த என்னும் சிறு தொழிலதிபர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு ₹2.5 லட்சம் அளவில் அவர்களுக்கு அரசு சார்பில் நிதி உதவி அளித்து, அவர்களை இந்த திட்டத்திற்கு மருந்து கடைகளை தொடங்க ஏற்பாடு செய்கிறது அரசு. மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த கடைகளில் முதல் ₹50,000 ரூபாய்க்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படுகிறது.

இந்த கடைகளில் மொத்தம் 700-க்கும் மேல் பல வியாதிகளுக்கான மருந்துகள் உள்ளன. கூடிய சீக்கிரம் இது 1000 வகைகளை எட்ட வேலைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. இந்த கடைகளில் மொத்தம் அறுவை சிகிச்சைக்கு தேவையான பொருட்களும் இங்கு கிடைக்கிறது. இதனால் இது அறுவை சிகிச்சையின் ஒட்டுமொத்த விலையை குறைக்கிறது.

பிரதமர் மலிவு மருந்தகம் திட்டத்தின் கீழ், 33 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப்பகுதிகளில் ஏறக்குறைய 3500 கடைகள் உள்ளன. மொத்தம் இந்தியாவில் உள்ள 718 மாவட்டங்களில், இந்த கடைகள் 584 மாவட்டங்களில் உள்ளன.

கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி சென்னை கே.கே.நகரில் மத்திய அரசின் மக்கள் மலிவு விலை மருந்தகத்தை தொடங்கி வைத்தார் Dr.தமிழிசை செளந்தரராஜன்.

Tags
Show More
Back to top button
Close
Close