செய்திகள்

தென்னிந்திய பழங்கால சிலைகளை சீனாவுக்கு கடத்த முயற்சி : எல்லைப் பாதுகாப்பு படையினர் மடக்கிப் பிடித்தனர்

சீனா வழியாக வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற தென் மாநிலங்களை சேர்ந்த 3 பழங்கால சிலைகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பகுதி சிலிகுரி. இங்கு நேபாளம் மற்றும் வங்கதேச நாடுகளின் எல்லைகள் அமைந்திருக்கின்றன. அப்பகுதியில் சிலர் சிலைகளை கடத்திச் செல்வதாக எஸ்.எஸ்.பி படையினருக்கு (சீமா சுரக்ஷா பல்) தகவல் கிடைத்தது. இதன் பேரில்அங்கு எல்லைப் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த ஒருவரை சோதனை செய்தபோதுஅவர் கொண்டு வந்திருந்த சாக்கு பையில் முருகன்சரஸ்வதிபுத்தர் ஆகிய பழங்கால சிலைகள் இருந்தன. விசாரணையில்அவர் அங்குள்ள கோர்சிங்ஜோத்தே பகுதியைச் சேர்ந்த தக் ஷயலால் ராய் என்பது தெரியவந்தது.

அவரையும்கைப்பற்றப்பட்ட சிலைகளையும் கார்பாரி காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.பி படையினர் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்துதக் ஷயலாலை கைது செய்த கார்பாரி போலீஸார்அவரிடம் கைப்பற்றப்பட்ட சிலைகள் குறித்து டார்ஜிலிங்கில் உள்ள வடக்கு பெங்கால் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையினரிடம் கருத்து கேட்டிருந்தனர். இது குறித்து வடக்கு பெங்கால் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் கூறும்போது, ‘பார்வதியின் மடியில் முருகன்சரஸ்வதி மற்றும் புத்தர் என மூன்று சிலைகள் உள்ளன. இந்த வகை சிலைகள்வட இந்தியாவில் கிடையாது. எனவேஅவை தென்னிந்தியக் கோயில் அல்லது அருங்காட்சியகங்களை சேர்ந்தவையாக இருக்கும்’ எனத் தெரிவித்தனர். மேலும் அதிகாரிகள் கூறும்போது, ‘தற்போது பிடிபட்ட சிலைகள்சீனா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்த திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’ எனத் தெரிவித்தனர்.

Tags
Show More
Back to top button
Close
Close