அரசியல்

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ரத யாத்திரை நடத்த அனுமதியளித்த உயர் நீதிமன்றம் – மம்தாவுக்கு சாட்டையடி

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். மம்தாவுக்கு ஆரம்பத்தில் எதிரிகளாக இருந்த கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் தற்போது மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து விட்டனர். தற்போது பா.ஜ.க அங்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருகிறது. இந்த நிலையில் ரத யாத்திரை நடத்த பா.ஜ.க திட்டமிட்டு இருக்கிறது. மாநிலம் முழுவதும் 158 பொதுக்கூட்டங்களும், மூன்று பிரிவுகளாக ரத யாத்திரையைத் தொடங்கவும், 34 நாட்கள் தொடர்ந்து யாத்திரை நடத்தவும் முடிவு செய்துள்ளது.

இதற்கான முதல் கூட்டத்தை ஜனநாயகத்தைக் காப்போம் பேரணி என்ற பெயரில் கூச் பிஹார் மாவட்டம், சாகர் ஐலாந்து, தராபித் ஆகிய இடங்களில் வரும் 22, 24 மற்றும் 26-ம் தேதிகளில் ரத யாத்திரை நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. இந்த ரதயாத்திரையை பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், ரத யாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்தவும், கூட்டங்கள் நடத்தவும் மேற்கு வங்க அரசிடம் பா.ஜ.க சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், பா.ஜ.க-வின் ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால் ரத யாத்திரை நடக்கும் இடங்களில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது, மதக்கலவரம் நடக்க வாய்ப்புள்ளது, ஆதலால், ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மாநில மம்தா அரசு மறுத்து வந்தது.

இந்நிலையில், மாநில பா.ஜ.க சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு, அனுமதி கோரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி வாதம் இன்று நடந்த நிலையில், பா.ஜ.க தரப்பு வழக்கறிஞர்கள் 15 நிமிடமும், அரசு தரப்பில் 10 நிமிடங்களும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதி தபாப்ரதா சக்கரவர்த்தி பா.ஜ.க ரத யாத்திரை நடத்த எந்தவிதமான தடையும் விதிக்க முடியாது.

பா.ஜ.க ரத யாத்திரை நடத்தலாம். ஆனால், எந்த மாவட்டத்தில் ரத யாத்திரை நடந்தாலும், 24 மணி நேரத்துக்கு முன்பாக, மாவட்ட போலீஸ் எஸ்.பி-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் ரத யாத்திரை மாவட்டத்துக்குள் நுழைவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். பா.ஜ.க நடத்தும் ரத யாத்திரை சட்டத்துக்கு உட்பட்டு, எந்தவிதமான வழக்கமான போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறி அனுமதி அளித்தது உத்தரவிட்டார். இந்த நிகழ்வு பிடிவாதமாக அனுமதி மறுத்து வந்த மம்தாவுக்கு பெருத்த பின்னடைவு என கூறப்படுகிறது.

செய்தி மூலம்: இந்து தமிழ்

Tags
Show More
Back to top button
Close
Close