சிறப்பு கட்டுரைகள்

பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் சாதனைகள்

2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் இந்தியாவின் 75 ஆம் சுதந்திர தினத்திற்கு முன் இந்தியாவில் உள்ள அணைத்து குடும்பத்திற்கும் ஒரு நல்ல தரமான வீடு இருக்கும் என்றும், அந்த வீடுகளில் தண்ணீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகளும் இருக்கும் என்றும் கூறினார். இதன் அடிப்படையில் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் (PMAY) 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொண்டகப்பட்டது.

இந்த திட்டத்தின் குறிக்கோள் 2022 ஆம் ஆண்டிற்குள் நகர்ப்புற பகுதிகளில் ஒரு கோடி இருபது லட்சம் தரமான வீடுகள் கட்டித்தருவது. இதுவரை மொத்தம் 65,04,037 வீடுகளை கட்ட அரசு  மேலிட ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை 12 லட்சம் வீடுகள்  தண்ணீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் முழுமையாக நிர்மாணித்து ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ், 2004 முதல் 2014 வரை, 10 வருடங்களில், வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சரவையால், நகர்ப்புற பகுதிகளில் 13.46 லட்சம் வீடுகளை கட்ட மட்டுமே மேலிட ஒப்புதல் அளிக்கப்பட்டது, 5.65 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டது. காங்கிரஸ் அரசு 10 ஆண்டுகளில் மேலிட ஒப்புதல் அளித்த வீடுகளை விடவும், கட்டிய வீடுகளை விடவும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு நான்கு ஆண்டுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளின் எணிக்கையும் கட்டப்பட்ட வீடுகளின் எணிக்கையும் அதிகமாக இருப்பது மோடி அரசு செயல்படும் வேகத்தை காட்டுகிறது.

வீடு என்றால் நான்கு சுவர்களுடன் நிறுத்திக்கொல்லாமல், கழிப்பறை, தண்ணீர், 24 மணி நேர மின்சாரம் போன்ற அத்தியாவசிய அடிப்படை தேவைகளுடன் வீடுகளை வழங்குவதே இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம். இந்த திட்டம் கூட்டுறவு கூட்டாட்சிக்கு (Cooperative Federalism) முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்படும் திட்டம். இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியின் கீழ், மாநில அரசுகள் வீட்டை கட்ட ஒப்புதலை தருவதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறவேண்டும். மோடி அரசு இதனை எளிதாக்கியுள்ளது. மாநில அரசுகள் இப்பொழுது மத்திய அரசிடம் ஒப்புதல் பெறாமல், தாங்களே நேரடியாக வீடுகளை கட்ட ஒப்புதல் தரலாம்.

Inputs from Livemint and Yojana magazine

Tags
Show More
Back to top button
Close
Close