2019 தேர்தல்

வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தென் சென்னை, பாண்டிச்சேரி உட்பட 5 மாவட்ட பூத் பொறுப்பாளர்களுடன் உரையாடுகிறார் பாரத பிரதமர் மோடி

பாரத பிரதமர் மோடி அவர்கள் வீடியோ நேர்காணல் மூலம் வரும்19ந் தேதி மாலை வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தென் சென்னை, பாண்டிச்சேரி உட்பட 5 மாவட்ட பூத் பொறுப்பாளர்களுடன் உரையாடுகிறார். அவருடன் கலந்து உரையாட வருமாறு பொறுப்பாளர்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து அகில இந்திய அளவில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்படுகின்றன. பிரதமர் மோடி நாடு முழுவதுமுள்ள அந்தந்த நாடாளுமன்ற தொகுதிகளின் பூத் பொறுப்பாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு தொகுதி நிலவரம் பற்றி கேட்டு தேர்தல் பணிக்கு தயார் படுத்தி வருகின்றார். அவர்களை உற்சாகப்படுத்தி பேசி வருகிறார். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருடன் மனம்விட்டு பேசி வருகின்றனர்.

“என்னுடைய வாக்குச் சாவடி ..வலிமையான வாக்குச் சாவடி” என்கிற இந்த வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் முதல் கட்டமாக கோவை, நாமக்கல், சேலம், கன்யாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளிலுள்ள பூத்கமிட்டி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்ற 15 ந் தேதி நடைபெற்றது. பிரதமருடனான இந்த நேரடி சந்திப்பு தமிழக பா.ஜ.க-வினரிடையே குறிப்பாக வாக்குச் சாவடி அளவிலான தொண்டர்களை ஊக்குவித்து மகிழ்வித்தது.

இந்த நிலையில் 2 ம் கட்டமாக வரும்19 ம் தேதி புதன்கிழமை மாலை 4.30 மணி அளவில் புதுச்சேரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் சென்னை (தெற்கு) ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பூத் பொறுப்பாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேரடியாக சந்தித்து பிரதமர் மோடி பேச உள்ளார். இந்த சந்திப்பு நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு செங்கல்பட்டு ஜி.எஸ்.டி சாலையில் ஆக்சிஸ் வங்கி எதிரில் உள்ள –ஏ.வி.என் மஹால், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரிலுள்ள ஏ.ஜி.எஸ் திருமண மண்டபம், பாண்டிச்சேரி தொண்டர்களுக்கு பாண்டிச்சேரி செண்பகா ஹோட்டல், வேலூர் மாவட்ட தொண்டர்களுக்கு வேலூர் நாராயணி பீடத்திலுள்ள நாராயணி மகால், தென் சென்னை மாவட்ட தொண்டர்களுக்கு தி.நகர் பர்கிட் சாலை ஸ்ரீ மஹால் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.

Tags
Show More
Back to top button
Close
Close