சமூக ஊடகம்

ட்விட்டரில் தேசிய ட்ரெண்டிங்கில் #GoBackSonia மற்றும் #StatueOfCorruption – இலங்கை தமிழர்கள் கொலைகளை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது என தமிழர்கள் சூளுரை

சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த தி,மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து 3 மாநில முதலமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்த நிலையில், தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அவருக்கு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே அண்ணா சிலை இருந்த அதே இடத்தில் மேடை அகலப்படுத்தப்பட்டு அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகள் அமைக்கப்பட்டன.

புதிய மேடையில் அண்ணா சிலைக்கு அருகே உள்ள கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மாலையில் சென்னை வர உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இன்று காலை முதல் ட்விட்டரில் #GoBackSonia என்ற வாசகம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

2008 – 2009 காலகட்டத்தில் இலங்கை தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இதற்கு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இந்தியா ராணுவம், உளவு மற்றும் பல வகைகளில் உதவியதாக இலங்கை தலைவர்களும், ராணுவ அதிகாரிகளும் பல முறை தெரிவித்துள்ளனர். இந்த கால கட்டங்களில் தி.மு.க காங்கிரஸ் கட்சியுட கூட்டணியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க இலங்கை தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டு இருந்த தருவாயில் கூட காங்கிரஸ் கட்சியுடன் 2009 தேர்தலுக்காக சீட் ஒதுக்குவதிலும், வெற்றி பெற்றப் பிறகு மந்திரி சபையில் இலாக்காக்கள் பெறுவதில் மட்டுமே குறியாக இருந்தனர். இதைதொடர்ந்து #StatueOfCorruption என்ற ட்விட்டர் ட்ரெண்டிங்கும் காலை முதல் காணப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close