தமிழ் நாடு

பிரதமரின் தேசிய டையலைசிஸ் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 200-க்கும் மேற்பட்ட டையலைசிஸ் இயந்திரங்கள் : மருத்துவர் தமிழிசை பெருமிதம்

இந்தியாவில் கிட்னி கோளாறால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. கிட்னி கோளாறில் மூன்றாம் நிலையை அடைந்த ஒரு நோயாளிக்கு மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை டையலைசிஸ் செய்ய வேண்டும். இதனால் ஒரு வருடத்திற்கு ₹3 லட்சம் வரை ஒரு கிட்னி நோயாளிக்கு செலவாகும்.

2016 ஆம் ஆண்டின் கணக்குப்படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 2.2 லட்சம் கிட்னி நோயாளிகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 3.4 கோடி முறைக்கு மேல் டையலைசிஸ் செய்யப்படுகிறது. ஏழை எளிய மக்களால் ஓராண்டுக்கு ₹2 லட்சம் செலவழிப்பது என்பது கனவாக தான் இருக்கும். இந்த சிரமங்களை உணர்ந்த மத்திய மோடி சர்க்கார், 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் தேசிய டையலைசிஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் மூலம் மருத்துவமனைகளுக்கு தேவையான டையலைசிஸ் இயந்திரங்களை மத்திய அரசு வழங்கும். இதற்காக 2016 ஆம் ஆண்டு, தமிழகத்திற்கு ₹4.25 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு 200 டையலைசிஸ் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் புதிதாக  ‘டையலைசிஸ்’ பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதனை, கடலுார் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் கலா துவக்கி வைத்தார். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் இரண்டு டையலைசிஸ் இயந்திரங்கள் கொண்ட புதிய பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் கலா, அப்பிரிவை திறந்து வைத்து, டையலைசிஸ் சேவையை துவக்கி வைத்தார். இந்த பிரிவில், தினசரி 4 பேருக்கும், மாதத்திற்கு 26 நாட்களில் 104 முறை டையாலிசிஸ் செய்ய முடியும் என தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

பாரத பிரதமரின் தேசிய டையலைசிஸ் திட்டத்தின் மூலம், அரசு மருத்துவமனைகளில் டையலைசிஸ் செய்யப்படுவது ஏழை நோயாளிகளுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.

Tags
Show More
Back to top button
Close
Close