செய்திகள்

நாடாளுமன்றத்தின் மீதான தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான், ஜனநாயகத்தின் மையப்புள்ளியான இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். வாகனத்தில் உள்துறை அமைச்சகத்தின் ஸ்டிக்கர் ஒட்டப் பட்டிருந்ததால், சோதனை ஏதுமின்றி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள் சரமாரியாக சுடத் தொடங்கினர். அமைதி தவழும் நாடாளுமன்ற வளாகம், துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தால் அதிர்ந்து போனது.

என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள், பாதுகாப்புப் படை வீரர்கள் குண்டுபாய்ந்து சரிந்து விழுந்தனர். ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டபோதும், 6 வீரர்கள் உள்பட 7 பேர் தங்கள் இன்னுயிரை இழக்க நேரிட்டது. மூன்றரை ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், 2005 ஆகஸ்ட் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. குற்றம் சாட்டப்பட்ட ஜீலானி, சவுகத் மற்றும் அப்சல் குரு ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்முறையீட்டில் கிலானி விடுவிக்கப்பட்டு, சவுகத் மற்றும் அப்சல் குரு மீதான மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் குழப்பங்கள் அரங்கேற, சவுகத்துக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக குறைக்கப் பட்டது. சர்ச்சைக்குரிய வாத, விவாதங்களுக்கு நடுவே 2013ஆம் ஆண்டில் அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்டார். ஒரு தேசத்தின் உச்ச அதிகாரம் நிரம்பிய நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியதை எப்படி ஜீரணிக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் நோக்கர்கள். ஜனநாயகக் கோட்டையாகத் திகழும் என்பதை சதித்திட்டம் தீட்டிய கயவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்பது நிச்சயம்!

Tags
Show More
Back to top button
Close
Close