இந்தியா

9 கோடி கழிப்பறைகளை கட்டியுள்ள மோடி அரசு – தலைமுறை தலைமுறையாக போற்றத் தகுந்த “தூய்மை இந்தியா” சுகாதார திட்டம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பல சமூக நல திட்டங்களில் மக்களுக்கு பெருமுதவியாக இருந்தது தூய்மை இந்தியா திட்டம். நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த சமயத்தில் கழிப்பறை உள்ள வீடுகளின் சதவீதம் வெறும் 38.7% சதவீதமாகவே இருந்தது. இப்பொழுது 97.26% சதவீதமாக உயர்ந்துள்ளது. மோடி அரசு பதவி ஏற்பதற்கு முன் கிராம பகுதிகளில் பல வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாமல் இருந்தன. மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தால் இது மாறியது.

சுமார் 40% சதவீதம் மக்கள் இந்தியாவில் 2014-ஆம் ஆண்டு திறந்தவெளி கழித்தலில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் என்று உலக வங்கி அறிக்கை கூறியது. இந்தியாவில் 40% சதவீத குழந்தைகள் உடல்ரீதியாகவும் மனவளர்ச்சி ரீதியாகவும் வளர்ச்சி குன்றி இருக்கின்றனர் என்றும் அதற்கு அவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லாமல் அவர்கள் திறந்தவெளி கழித்தலில் ஈடுபடுவதுதான் காரணம் என்றும் அந்த அறிக்கை கூறியது. இதனால் குழந்தைகளுக்கு பல தொற்று நோய்களும் வருகிறது. பல குழந்தைகள் தங்களின் உயிரையும் இழக்கின்றனர். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 5.3% சதவீதம் குழந்தைகள் ஐந்து வயது அடைவதற்கு முன்னே தங்களின் உயிரை இழக்கின்றனர். இதற்க்கு பெரிய காரணம் திறந்தவெளி கழித்தல்தான். தூய்மை இந்தியா திட்டம் இந்த சூழ்நிலையை மாற்றியுள்ளது.

இதற்கு முன் இருந்த அரசுக்கள் திறந்தவெளி கழித்தலை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறுவதும் தவறு, ஆனால் அதில் தேற்றம் மிகவும் குறைவு என்பதையும் மறுக்க இயலாது.

2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் அன்று பிரிதமர் நரேந்திர மோடி தனது முதல் சுதந்திர தின பேச்சில் திறந்தவெளி கழித்தலிற்கு எதிராக குரல் கொடுத்து , 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்திக்கு முன் திறந்தவெளி கழித்தலைந் ஒழிக்க உறுதி எடுத்தார். அந்த சமயத்திலிருந்து கழிவறை கட்டுவதற்கான பணிகள் மிக வேகமாக நடந்தது.

வருடம் கழிப்பறை இருக்கும் வீடுகளின் சதவீதம்(%)
2013-2014 38.7%
2014-2015 43.30%
2015-2016 51.34%
2016-2017 65.25%
2017-2018 84.24%
2018-2019 97.26%

இப்பொழுது இந்தியாவில் 97.26% சதவீதம் வீடுகளில் கழிப்பறை இருக்கின்றன. பிரதமர் மோடி நினைத்த படி 2019-ஆம் ஆண்டு காந்தி ஜெயந்திக்கு முன் நூறு சதவீதம் அடையும். இதனால் அடுத்த அடுத்த தலைமுறையில் லட்சக்கணக்கான குழந்தைகள் வளர்ச்சி குன்றாமல் இருப்பார்கள், உயிரை இழக்காமல் இருப்பார்கள். இது அடுத்த தலைமுறையில் உள்ள பலரை காத்து, அடுத்த தலைமுறையை நல்ல வழியில் உருவாக்கும் திட்டம். இது மோடி அரசின் மிக பெரிய சாதனை, ஆனால் துரதிருஷ்டவசமாக ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.

வருடம் தமிழ்நாட்டில் இருக்கும் வீடுகளின் சதவீதம் (%)
2014-2015 52.30%
2015-2016 62.42%
2016-2017 74.57%
2017-2018 97.94%
2018-2019 100%

தமிழகத்தில் 52.30% சதவீதமாக இருந்த கழிப்பறை உள்ள வீடுகளின் சதவீதம் இப்பொழுது 100% சதவீதம் அடைந்துள்ளது. இந்தியா முழுவதும் 2014-ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி முதல் இன்று வரை மொத்தம் 8,99,19,865 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 25 மாநிலங்கள் திறந்தவெளி கழித்தல் இல்லாத மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் தமிழகமும் ஒன்று.

Tags
Show More
Back to top button
Close
Close