அரசியல்

வெறும் 4337 வாக்குகளில் மத்திய பிரதேச ஆட்சியை இழந்த பா.ஜ.க – ஜனநாயகத்தின் அழகியல் ஒரு பார்வை!

மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 7 தொகுதிகளில் ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வெற்றி வாய்ப்பை இழந்தது. சில தொகுதிகளை சேர்த்து 4,337 வாக்குகளை அக்கட்சி பெற்றிருந்தால் பா.ஜ.க மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மையான ஆட்சியை அமைத்திருக்கும் எனவும், அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சி கீழ்கண்ட இந்த 7 இடங்களில் மிக மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே காங்கிரஸிடம்  வெற்றி வாய்ப்பை நூலிழையில் இழந்தது. குறிப்பாக கீழ்கண்ட 7 தொகுதியில் மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தால் மாநில ஆட்சியையே பறிகொடுக்க வேண்டியதாயிற்று என தேர்தல் குறிப்பிட்டுள்ளார்கள். குவாலியர் தெற்கில் வெறும் 121 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. அதேபோல சுவஸ்ரா தொகுதியில் 350 வாக்குகள், ஜபல்பூர் வடக்கு தொகுதியில் 578 வாக்குகள், ராஜ் நகர் தொகுதியில் 732 வாக்குகள், தமோ தொகுதியில் 798 வாக்குகள், பியாரா தொகுதியில் 896 வாக்குகள் , ராஜ்பூர் தொகுதியில் 932 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி வாய்ப்பை பா.ஜ.க இழந்துள்ளது. மேற்கண்ட 7 தொகுதிகளின் வாக்குகள் வித்தியாசம் 4,337 வாக்குகள் மட்டுமே. இந்த வாக்குகளை மட்டும் கூடுதலாக பா.ஜ.க பெற்றிருந்தால் பா.ஜ.க வெற்றிபெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 108 -லிருந்து 115-ஆக அதிகரித்திருக்கும். காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 114-ல் இருந்து 107-ஆக குறைந்து விட்டிருக்கும், இதனால் ஆட்சி கை மாறியிருக்காது. பா.ஜ.க யாருடைய தயவின்றியே பெரும்பான்மை ஆட்சியை அமைத்து இருக்கும் என கூறுகின்றனர்.

அதே சமயம் ஜரோரா தொகுதியில் 511 வாக்குகள், பினா தொகுதியில் 632 வாக்குகள், கொலாராஸ் தொகுதியில் 720 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க-வும் நூலிழையில் வெற்றி பெற்றுள்ளது. மொத்த தொகுதிகளில் காங்கிரஸ் 200 வாக்குகள் வித்தியாசத்தில் 2 தொகுதிகளிலும், 500 வாக்குகள் வித்தியாசத்தில் 2 இடங்களிலும், 1000 வாக்குகள் வித்தியாசத்தில் 7 இடங்களிலும், 2000 வாக்குகள் வித்தியாசத்தில் 10 இடங்களிலும், 3000 வாக்குகள் வித்தியாசத்தில் 15 இடங்களிலும், 4000 வாக்குகள் வித்தியாசத்தில் 16 இடங்களிலும், 5000 வாக்குகள் வித்தியாசத்தில் 9 இடங்களிலும் மட்டுமே நூலிழையில் வெற்றி பெற்று பிற கட்சிகள், சுயேட்சைகள் உதவியுடன் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இதனால் மாநிலத்தில் காங்கிரஸ் அலை வீசுவதாகவோ அல்லது மோடிக்கு எதிரான அலை வீசுவதாகவோ யாரும் கணிக்க முடியாது என்றும், பா.ஜ.க எடுக்கப்போகும் அடுத்த கட்ட நடவடிக்கைகளால் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.

குஜராத்தில் வெற்றிக்கான வாக்கு விகிதாச்சார அளவை மாற்றிக் கொள்ளும் வகையில் வாக்காளர்கள் ஆதரவைப் பெறும் பணிகளில் பா.ஜ.க தீவிரமாக செயல்பட்டது. பொதுவாக வாக்காளர்களை அணி திரட்டுவதிலும், வாக்களிக்கும் சாவடிகளுக்கு அவர்களை அழைத்துச் செல்வதிலும் கில்லாடிகளான பா.ஜ.க-வினர் 1000-க்கும் குறைவான வாக்குகளில் 70 சதவீத தொகுதிகளை காங்கிரசிடம் இழந்தது ஒரு அதிசயமான தோல்வி என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close