செய்திகள்

வல்லரசு நாடுகள் போட்ட முட்டுக்கட்டைகளை மீறி சரித்திரம் படைத்த இந்தியா!

அணு ஆயுதங்களுடன் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. அக்னி-5 ஆனது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் திட எரிபொருள் ஏவுகணையாகும். இது இந்தியாவிற்கு 5,500 கி.மீ தொலைவிற்கு அப்பாலுள்ள இலக்கினையும் தாக்கவல்ல வல்லமையை அளிக்கும். இந்த ஏவுகணை முதன்முதலாக 19 ஏப்ரல் 2012 அன்று ஒடிசாவின் வீலர் தீவில்(அப்துல்கலாம் தீவு) இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் போர்ப்பொருள்களைத் தவிர செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்த முடியும்.

அக்னி-5 ஏவுகணை செயற்கைக்கோள்களையும் தாக்கி அழிக்கும் திறன் பெற்றது. முற்றிலும் உள்நாட்டில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். அக்னி-5 சோதனை தெற்காசிய வலயத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான ஓர் வல்லரசாக விளங்க இந்தியா எடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. இதன் வீச்சில் பெய்ஜிங், சாங்காய் சீன நகரங்கள் உள்ளன.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில்  இருந்து இன்று பிற்பகல் ‘அக்னி–5’ ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை குறிதவறாமல் ‘அக்னி–5’ பாய்ந்து தாக்கி, அழித்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னர் ஆறு முறை நடத்தப்பட்ட பரிசோதனைகளும் வெற்றிகரமாகவே அமைந்தது. இந்தியா நவீன ஏவுகணையை உருவாக்கிவிடாமல் தடுக்க வல்லரசு நாடுகள் கடந்த காலத்தில் போட்ட முட்டுக்கட்டைகளை மீறி இந்தியா அக்னி-5 ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close