2019 தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 5 மாநில சட்டமன்ற தேர்தலை கருத்திக்கொண்டு சர்சைக்குரிய பதிவுகளை தடுக்கும் வகையில் வல்லுனர் அமைக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. தேர்தல் சுதந்திரமாக நடைபெற தங்கள் வலைதளம் உதவிகரமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் குறித்து பொதுமக்கள் உரையாடுவதை வரவேற்கும், அதேவேளையில் அவதூறு பரப்புவதை அனுமதிக்க முடியாது என்றும் பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. எனவே வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் பதிவுகளை தடுக்கும் வகையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் மீண்டும்  2019 இந்திய பொதுத்தேர்தலுக்காக அதிரடி மாற்றங்களை செய்ய உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வலைதளங்களில் அரசியல் விளம்பரங்களை பதிவிட விரும்புவோர் அடையாளம் மற்றும் இருப்பிடம் சார்ந்த விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்காக அடையாளச் சான்று, இருப்பிடச் சான்றை சமர்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் விளம்பரங்களை பதிவிடுபவர் பற்றிய விவரங்கள் விளம்பரங்களில் தெரியும் என்றும், தேடும் வசதி கொண்ட விளம்பர மையம் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. விளம்பரத்திற்கும் செலவிடப்பட்ட தொகை, எத்தனை பேர் பார்த்து உள்ளனர் என்ற விவரங்களை மையத்தில் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : NDTV, Thanthi TV

Tags
Show More
Back to top button
Close
Close