செய்திகள்

இப்படியும் ஒரு வி.ஐ.பி-யா? : கிரண் பேடிக்கு சல்யூட்

புதுச்சேரியில் சமூக நலத்துறை அலுவலகம் சென்ற துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, தன்னை வரவேற்று வைத்திருந்த பேனரை அகற்றி, அதை வைத்த அதிகாரிக்கு பணம் வழங்கிய ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதுச்சேரி தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள சமூகநலத்துறை அலுவலகத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்ய சென்றார். அப்போது அலுவலக நுழைவு வாயிலில், பொதுமக்களுக்கு உதவும் வகையிலான உதவி மையத்தை வைக்குமாறு அறிவுறுத்தினார்.

அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருக்கையில் தன்னை வரவேற்று வைத்திருந்த பேனரைப் பார்த்த கிரண் பேடி, இதை யார் வைத்தது என்று கேட்டார். அதற்கு சமூக நலத்துறை இயக்குனர் சாரங்கபாணி தாம் தான் பேனர் வைத்ததாகக் கூறவே எவ்வளவு செலவு செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். ₹500 என்று அதிகாரி கூறவே, போலீசாரிடம் இருந்து அந்தப் பணத்தைப் பெற்று அதிகாரியிடம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து அலுவலகத்திற்கு உள்ளே சென்ற கிரண் பேடிக்கு அதிகாரி ஒருவர் சால்வை அணிக்கவே அதற்கான தொகை ₹750 கிரண் பேடி கொடுத்து விட்டார். இதனால் சமூக நலத்துறை அலுவலகம் கலகலப்பாக காணப்பட்டது.

Source : Polimer, Dinakaran

Tags
Show More
Back to top button
Close
Close