இந்தியா

10 ரூபாயில் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை ! கலக்கும் மோடி அரசு !

2014 ஆம் ஆண்டு மோடி அரசு பதவியேற்ற பிறகு அடித்தட்டு மக்களுக்கான பல சமூக காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் மருத்துவ காப்பீட்டு திட்டங்களும் அடங்கும். உலகின் மிக பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத்தின் மூலம் ஐந்து மாதங்களில் 4 லட்சம் மக்கள் பயன் அடைந்துள்ளனர். அதே போல், நாடு முழுவதும் 5000 ஜன் அவுஷதி கடைகள் மூலம் மலிவு விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன.

ஏழை மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்த காப்பீடு இல்லாதவர்களுக்கும் ESI மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் அதிரடி திட்டத்தினை மத்திய அரசு தீட்டி வருகிறது. ESI மருத்துவமனையில் காப்பீடு இல்லாத ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம் குறித்து அண்மையில் நடந்த ESI காப்ரேஷனின் 176-வது கூட்டத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வர் முடிவெடுத்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் காப்பீடு இல்லாதவர்களும் வெளிநோயாளிகள் மருத்துவ ஆலோசனையை வெறும் 10 ரூபாய்க்கும், 25 சதவீத கட்டணத்தினை செலுத்தி மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் வரும் குறிப்பிட்ட சில சிகிச்சைகளையும், ஒரு வருடத்திற்கு குறைந்த விலையில் மருந்துகளை வாங்கிய விலைக்கே அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.தொழிலாளர் துறை அமைச்சகத்தின் இந்தத் திட்டத்தினால் ஏழை மக்கள் தரமான மருத்துவ சிகிச்சையைப் பெறுவார்கள் என்று அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

Inputs : News18

Tags
Show More
Back to top button
Close
Close