அரசியல்

அடிமாட்டு விலைக்கு அரசு நிலத்தை வாங்கி குவித்த வழக்கு: சோனியா காந்தி மருமகன் அலுவலகங்களில் அதிரடி ரெய்டு

சோனியா காந்தியின் மகளான பிரியங்காவின் கணவர் ராபர்ட வாத்ரா. இவர் ரியல் எஸ்டேட் உட்பட பல தொழில் புரிந்து வருகிறார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியின் போது, ராஜஸ்தான் மற்றும் அரியானாவிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது அங்குள்ள முதல்வர்கள் மற்றும் அதிகாரிகளை பயன்படுத்தி அந்த மாநிலங்களிலுள்ள அரசு நிலங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி, ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பல கட்டிட நிறுவனங்களுக்கு அதிக விலை வைத்து விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து வந்தார். ஆனால், இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்கள் வலுப்பட்டுள்ளதை அடுத்து வழக்குகள் வேகமெடுத்துள்ளன.

இந்நிலையில் இன்று அமலாக்க துறை அதிகாரிகள் டில்லியில் உள்ள வாத்ராவின் அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் சோதனைக்கு முன்பாகவே அவர் ஓட்டமெடுத்துவிட்டார். இதேபோன்ற அதிரடி சோதனை இன்று வாத்ராவின் பெங்களூர் அலுவலகத்திலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரூபாய் 2 ஆயிரம் கோடி மதிப்புடைய நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கைக்கு சொந்தமான சொத்துக்களை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி குறுக்கு வழியில் அபகரித்துவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், வருமான வரி தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மருமகன் வாத்ராவுக்கும் சிக்கல் எழுந்துள்ளது.

Show More
Back to top button
Close
Close