செய்திகள்

கற்பழிப்பு கண்டன ஊர்வலத்தில் கற்பழித்த காமுகன் – கேரளாவில் சந்தி சிரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் கற்பழிப்பு பொறுப்பாளர்கள்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பரசினிகடவு என்ற இடத்தில் 16 வயது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணியான D.Y.F.I அமைப்பை சேர்ந்த நிகில் என்ற இளைஞனும் அடக்கம். டெக்கான் கிராணிகள் வெளியிட்ட செய்தி குறிப்பின் படி, தலிபரம்பா காவல்துறை துணை எஸ்.பி K.V.வேணுகோபால் கூறுகையில், “அந்த சிறுமி, லாட்ஜிற்கு கொண்டு செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நவம்பர் 13 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடந்துள்ளது. இதற்கு லாட்ஜின் உரிமையாளரும் உடந்தை”, என்று கூறியுள்ளார்.

குற்றம் புரிந்த அனைவரும் சைபர் பிரிவு உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது.

கைது சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர்கள் இயக்கமான D.Y.F.I சார்பில், இந்த வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி, D.Y.F.I இயக்கத்தை சேர்ந்த நிகில் மோஹனன் என்ற இளைஞனும் அந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளார் என்று ஆசியா நெட் மலையாளம் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. பாலியல் வன்கொடுமை புரிந்தது கம்யூனிஸ்ட் இயக்கமான D.Y.FI.-யின் உறுப்பினர். அதற்கு எதிராக பேரணி நடத்தியது D.Y.F.I இயக்கம். அந்த பேரணியில் கலந்து கொண்டது பாலியல் வன்கொடுமை புரிந்த கம்யூனிஸ்ட் D.Y.F.I குற்றவாளி.

பாலியல் வன்கொடுமை புரிந்து விட்டு இதை விட மக்களை ஏமாற்றும் உத்தி வேறு ஏதேனும் இருக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான்.

Featured Image Courtesy : The News Minute

Tags
Show More
Back to top button
Close
Close