செய்திகள்

“கச்சா எண்ணெய் உலக சந்தையில் விலை குறைய இந்திய பிரதமர் மோடி மூலக்காரணம்” – சவுதி எரிசக்தி அமைச்சர்

“கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கு காரணம் டிரம்ப் மட்டுமில்லை, இந்திய பிரதமர் மோடியும் மிக முக்கிய காரணம். இந்திய வாடிக்கையாளர்கள் சார்பில் பலமுறை அழுத்தம் கொடுத்தார்” என்று கூறியுள்ளார் சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் காலித் அல்-ஃபாலஹ்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பைப் பற்றியது. அதாவது டிரம்ப் கொடுத்த அழுத்தத்தினால் தான் கச்சா எண்ணை உலக சந்தையில் விலை குறைந்து வருகிறதா என்று கேட்கப்படவே அவர் பிரதமர் மோடியை குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அரங்கத்தில் அமெரிக்க அதிபரையும் இந்திய பிரதமரையும் ஒரே தட்டில் வைத்து பேசியுள்ளார் சவுதி அரேபிய எரிசக்தி அமைச்சர் காலித் அல்-ஃபாலஹ். இது பிரதமர் மோடியின் ஆளுமையையும், பிரதமர் மோடியின் கீழ் இந்தியா சர்வதேச அளவில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக உருமாறி வருகிறது என்பதற்குமான அளவுகோல் என சொல்லப்படுகிறது.

“கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு யார் காரணம்? டிரம்ப் தான் காரணமா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “டிரம்ப் அவர் நாட்டு மக்களுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொண்டார். அதுபோல் இந்திய பிரதமர் மோடியும், ஜி-20 நாடுகள் மாநாட்டில் என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து, இந்திய நுகர்வோர் பாதிக்கப் படாமல் இருக்க கடும் அழுத்தம் கொடுத்தார். அவரை மூன்று முறை சந்தித்திருக்கிறேன். அவருக்கும் செல்வாக்கு இருக்கிறது!” என்று கூறியுள்ளார்.

உள்ளூர் போராளிகள் பிரதமர் மோடியை போலி செய்திகளின் அடிப்படையில் தூற்றிக்கொண்டு இருக்கவே, சர்வதேச வல்லமைகள் பலரும் மோடியையும், அவரது ஆளுமையையும் புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close