செய்திகள்

இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசுவது ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல – நிதர்சனத்தை தெளிய வைத்த துணை ஜனாதிபதி

ஏழை மக்கள் கொண்டாடும் ஒரு திருவிழாவாக மாறிப்போனது தேர்தல் காலங்கள். ஏழை மக்களின் வாக்குகளை பெற என்ன வேண்டுமோ அதை செய்ய தயாராக இருக்கின்றன அரசியல் கட்சிகள். தேர்தலின் போது வாக்குகளை பெற,  பண வினியோகத்துக்கு இணையாக வாக்குறுதிகளை வாரி இறைக்க வேண்டியிருக்கிறது. நம்பவே முடியாத இலவச திட்டங்களையும், மானியங்களையும் கொட்டுகிறது அரசியல் கட்சிகள்.

அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் இலவசங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதில், அரசியல்வாதிகள் ஒரு கட்சியை விட்டு மாற்றுக்கட்சியில் சேருவதற்கு அவர்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது. ஆனால் அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு மாற்று கட்சிக்கு செல்ல வேண்டும். தேர்தலின் போது அரசியல் கட்சிகள் முதலில் தங்களது மாநிலத்தின் வருவாய் எவ்வளவு? செலவு எவ்வளவு? போன்ற விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தேர்தலில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

இலவச அறிவிப்புகள் ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல. இதனால் நிதி விரயமாகிறது. சுப்ரீம் கோர்ட்டில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகள் 4,127 நிலுவையில் உள்ளது. அரசியல் குற்றப்பின்னணி கொண்டவர்கள் வழக்குகளை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் விசாரிக்க நீதிமன்றங்கள் முன்வரவேண்டும். ஆனால் தற்போது விசாரணையின் கால அளவை ஆண்டுக்கணக்கில் நீட்டிக்கும் நிலையே உள்ளது. இது போன்று குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் தேர்தல் தொடர்பான வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரிப்பதற்கென சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close