செய்திகள்

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் மறைவு: தமிழிசை, ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மறைந்த இயற்கை விவசாயியும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடருமான ‘நெல்’ ஜெயராமனின் உடலுக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை உட்பட பல தலைவர்கள்,அஞ்சலி செலுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடருமான நெல் ஜெயராமன், உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலை காலமானார். பல வருடங்களாக நெல் திருவிழா நடத்தி, பாரம்பர்ய நெல் வகைகள் குறித்து விவசாயிகளிடமும், மக்களிடமும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தியவர் ஜெயராமன்.

இவரது மறைவை அடுத்து பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை உட்பட பல தலைவர்கள், அஞ்சலி செலுத்தினர்.

அவரது இழப்பு குறித்து தமிழிசை அவர்கள் கூறும்போது “நமது முக்கிய உணவான நெல் பற்றிய விழிப்பு உணர்வை விதைத்தது மட்டுமன்றி, இயற்கை முறையில் உடல்நலனுக்கு ஆரோக்கியமான அக்கால நெல் வகைகளை மக்களிடம் மீண்டும் அறிமுகப்படுத்தியவர் ஜெயராமன். அவருடைய குடும்பத்துக்கு குடும்பத்துக்கு அரசு ஊக்கமாகவும், ஆறுதலாகவும் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் நெல் ஜெயராமன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Tags
Show More
Back to top button
Close
Close