செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் செயல்படத் துவங்கும்: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

மோடி சர்க்காரால் அறிவிக்கப்பட்டு மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் கோ.புதுப்பட்டி பகுதியில் 198.27 ஏக்கர் பரப்பளவில், ₹1,500 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் செயல்படத் துவங்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பிரம்மாண்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள இந்த வளாக கட்டடத்தில் மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சிக் கூடம், செவிலியர் கல்லூரி மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகள் இடம்பெறவுள்ளன.

இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், நிலம் சரி செய்யும் பணிகள் நடை பெற்று வருகின்றன. எய்ம்ஸ் கட்டுமானக் குழுவினரும் வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது செயல்படத் துவங்கும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பாக விளக்கமளிக்க கோரி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு உயர் நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் ‘எய்ம்ஸ் கட்டுமானக் குழுவினரின் ஆய்வறிக்கை அமைச்சரவையின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த பிறகு 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் துவங்கும் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close