செய்திகள்

டீ கடையில் பத்திரிக்கையாளரை தாக்கிய சுரேஷ் பாபுவிற்கு தி.மு.க-வுடன் தொடர்பு : அம்பலப்படுத்திய மிரர் நவ் – மன்னிப்பு கேட்பாரா ஸ்டாலின் ?

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ம.தி.மு.க சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் தி.மு.க சார்பில் டி.கே.எஸ் இளங்கோவன், மா.சுப்ரமணியம் உள்ளிட்டோரும், வி.சி.க சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும் பங்கேற்றுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது அருகில் இருந்த டீக்கடையில் தி.மு.க பிரமுகர் சுரேஷ் பாபு கைகலப்பில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாயின. ஆனால், சுரேஷ் பாபு என்பவர் தி.மு.க நிர்வாகி இல்லை என்று தி.மு.க தரப்பில் அறிவிக்கிப்பட்டது. மேலும், சுரேஷ் பாபு தி.மு.க நிர்வாகி என்று செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கும் கண்டனம் தெரிவித்தது.

தற்போது, சுரேஷ் பாபுவுக்கும் தி.மு.க-வுக்கும் உள்ள தொடர்பை மிரர் நவ் ஆங்கில தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது.

இது குறித்து மிரர் நவ் தொலைக்காட்சியில் பேசிய பத்திரிக்கையாளர் ஷபீர் அகமத், சுரேஷ் பாபுவுக்கும், தி.மு.க-வுக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தினார். டீ கடையில் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டபோது, சுரேஷ் பாபுவுடன் தி.மு.க நிர்வாகிகளும் உடன் இருந்துள்ளனர். கனிஷ் குமார் தீனன் என்ற தி.மு.க நிர்வாகி, சம்பவத்தின் போது, சுரேஷ் பாபுவுடன் இருந்துள்ளார். கனிஷ் குமார் தீனன் என்பவர், தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளிவந்துள்ளது.

சம்பவ இடத்தில் சுரேஷ் பாபுவுடன் உடன் இருந்த கனிஷ் குமார் தீனன்
கனீஷ் குமார் தீனனுடன் தி.மு.க தலைவர் ஸ்டாலின்

வெங்கடாபுரம் பகுதி மக்களிடையே விசாரித்த போது, சுரேஷ் பாபு தி.மு.க-வில் இருப்பது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டுள்ளதாக பத்திரிக்கையாளர் ஷபீர் அகமத் கூறியுள்ளார். மேலும் சில தி.மு.க நிர்வாகிகளுடன் சுரேஷ் பாபு இருக்கும் புகைப்படமும் வெளிவந்துள்ளது. சூரியன் கே பிரபு மற்றும் ஷான் சின்னா ஆகிய தி.மு.க நிர்வாகிகளுடன் சுரேஷ் பாபு இருக்கும் புகைப்படம் கிடைத்துள்ளது. அதுபோக, சுரேஷ் பாபு கைது செய்த போது காவல் நிலையத்திற்கு சில தி.மு.க நிர்வாகிகள் வந்ததாகவும் தாக்கப்பட்ட ப்ரமோத்துடன் இருந்த பத்திரைக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சூரியன் பிரபு மற்றும் ஷான் சின்னா ஆகிய தி.மு.க நிர்வாகிகளுடன் சுரேஷ் பாபு

பத்திரிக்கையாளரை தாக்கிய சுரேஷ் பாபுவுக்கும் தி.மு.க-வுக்கும் தொடர்பு இல்லை என கூறிய தி.மு.க நிர்வாகிகள் இதற்கு என்ன பதில் கூற போகிறார்கள்?

Tags
Show More
Back to top button
Close
Close