செய்திகள்

செல்லா காசாகி போன காங்கிரஸ் வாதம் – உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

புதுச்சேரியில் 3 எம்.எல்.ஏ-க்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் எனவும், இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புதுச்சேரி சட்டப்பேரவையில் பா.ஜ.க-வை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நியமன எம்.எல்.ஏ-க்களாக மத்திய அரசு நியமித்தது.

அவர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனை ஏற்க முதலமைச்சர் நாராயணசாமி மறுத்துவிட்டார். இதுதொடர்பான வழக்கில் 3 நியமன எம்.எல்.ஏ-க்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 நியமன எம்.எல்.ஏ.-க்கள் நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்து, உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் தலையிட மாநில அரசுக்கு உரிமை இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

Tags
Show More
Back to top button
Close
Close