செய்திகள்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வத்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சர்ச்சைக்குரிய நிறுவனத்துடன், நிலம் தொடர்பாக நிகழ்ந்த பண பரிமாற்றம் குறித்து பதில் அளிக்கும்படி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன், ராபர்ட் வாத்ராவுக்கு, அமலாக்க துறை, ‘சம்மன்’ அனுப்பி உள்ளது.

‘பூஷண் பவர் அண்ட் ஸ்டீல்’ நிறுவனம், டில்லியை சேர்ந்த, ‘அல்லெஜனி பின்லீஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துக்கு, ₹5.64 கோடி கடன் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பணத்தில், சோனியாவின் மருமகனும், காங்கிரஸ் தலைவர் ராகுலின் மைத்துனருமான, ராபர்ட் வாத்ராவுக்கு சொந்தமான, ‘ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி’ நிறுவனத்திடம் இருந்து, நிலம் வாங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனத்துக்கு, வருமான வரித்துறை தீர்வு கமிஷன், சில சலுகைகளை அளித்ததாக, பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இது குறித்து, பா.ஜ.க., செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா, டில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம், 2004 – 05 நிதியாண்டு முதல், 2011 – 12 வரை, தாக்கல் செய்த வருமான வரி கணக்கில், 800 கோடி ரூபாய் வரை தில்லுமுல்லு செய்துள்ளதாக” கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக விளக்கம் கேட்டு, வருமான வரித் துறை, ‘நோட்டீஸ்’ அனுப்பியது. இதை எதிர்த்து, தீர்வு கமிஷனிடம், அந்த நிறுவனம் முறையீடு செய்தது; அது ஏற்கப்பட வில்லை. பின், 2013-ல்,பூஷண் நிறுவன கணக்கில் உள்ள பணத்தில், ₹412 கோடியை, கணக்கில் வராத வருவாயாக கருதும்படி தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இரு வாரங்களுக்கு பின் மாற்றியமைக்கப்பட்ட தீர்வு கமிஷன், 2013, ஜூன், 30-ல், கணக்கில் வராத வருவாய் தொகையை, ₹317 கோடி ரூபாயாக குறைத்தது.மேலும், பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனத்துக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத வகையில், பாதுகாப்பு வழங்கப்படுவதாக, தீர்வு கமிஷன் கூறியது.

இதன் மூலம், தில்லு முல்லு நடந்ததாக கருதப்படும், ₹800 கோடியில், ₹500 கோடி ரூபாய், முறையான தொகையாக மாற்றப்பட்டுள்ளது. பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம், அல்லெஜனி பின் லீஸ் நிறுவனத்துக்கு பிணையில்லாத கடன் வழங்கியது. இந்த பணம், ராபர்ட் வாத்ராவிடம் இருந்து நிலம் வாங்க பயன் படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்பே, பூஷண் நிறுவனத்துக்கு ஆதரவாக, வருமான வரித்துறை தீர்வு கமிஷன் செயல்பட்டு உள்ளது. சோனியா குடும்பத்தினர், விவசாயிகளின் நிலங்களை பறித்து, அதை ஊழல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.”, என்று கூறியுள்ளார்.

Inputs from Dinamalar

Tags
Show More
Back to top button
Close
Close