இந்தியா

நான்கு வருடங்களில் 10 மடங்கு உயர்த்த இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி ! 2022 க்குள் 100 GW மின் உற்பத்திக்கு இலக்கு ! அசுரவேகத்தில் செயல்படும் இந்திய அரசு

2014 ஆம் ஆண்டு இந்தியாவின் சூரிய மின் உற்பத்தியின் திறன் 2.6 GW ஆக இருந்தது. தற்போது மின் உற்பத்தி திறன் 26 GW ஆக உயர்ந்துள்ளது. அதாவது நான்கு வருடங்களில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. முன்னதாக 2022 ஆம் ஆண்டு 20 GW உற்பத்தி என்ற இலக்கை அரசு நிர்ணயித்தது, இந்த இலக்கை அரசு நான்கு வருடங்களுக்கு முன்னதாகவே அடைந்துவிட்டது. தற்போது 100 GW உற்பத்தி திறன் என்ற இலக்கை நிர்ணயித்து அசுரவேகத்தில் செயல்படுகிறது.

நிலக்கரி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை விட சூரிய ஆற்றலால் கிடைக்கும் மின்சாரத்தின் விலை 18 % குறைவு. சூரிய ஆற்றலினால் செயல்படும் பொருட்கள் பெருமளவில் கிராமப்புற தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. 2015 ஆம் ஆண்டின் இறுதியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சூரிய விளக்குகள் நாட்டில் விற்கப்பட்டன. மண்ணெண்ணையின் தேவை குறைந்தது. அந்த ஆண்டில், 1,18,700 சூரிய ஒளி விளக்குகளும், 46,655 சூரிய தெரு விளக்குகளும் நிறுவப்பட்டன. 14 லட்சம் சூரிய குக்கர் இந்தியாவில் விநியோகிக்கபட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் ஆகியோர் குர்கானில் சர்வதேச சூரிய கூட்டமைப்பின் தலைமையகத்திற்கு அடிக்கல் நாட்டினர். 120 நாடுகள் இந்த கூட்டமைப்பில் சேர்ந்துள்ளன. இதனால் சூரிய மின் உற்பத்திக்கு தேவையான அனைத்து பொருட்களும் மலிவு விலையில் கிடைக்கும். இந்தியாவின் “Scheme For Development of Solar Parks” என்ற திட்டத்தின் மூலம் மிகப்பெரிய சூரிய பூங்காக்களுக்கு வெளிநாட்டு மூலதனத்தை வெற்றிகரமாக ஈர்த்துள்ளது. 2 GW மின் உற்பத்தி திறனுடன் ஆறாம் இடத்தில் தமிழகம் உள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா வின் திறன் 6 GW.

சூரிய மின் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு பல சலுகைகளை அறிவித்துள்ளது. வீட்டு கூரையில் அமைக்கும் சூரிய தகுடுகலின் 40% முதலீட்டுக்கு வரி விலக்கு , இதற்கு ஆகும் செலவில் 30% அரசு ஏற்கும். உள்ளூர் சூரிய தடுகள் உற்பத்தியை ஊக்குவிக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தகுடுகளுக்கு 25% அதிக வரி மற்றும் பல சலுகைகள் இருக்கின்றன.

இந்தியாவின் மிக பெரிய சூரிய மின் பூங்காவை லடாக் பகுதியில் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் உற்பத்தி திறன் 25 GW ஆக இருக்கும். மிக அதிக சூரிய கதிர்வீச்சை இந்த பகுதி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close