செய்திகள்

“தேசத்திற்கு நல்லது நினைக்கிறார் மோடி” பிரதமரை குறித்து ரஜினி புகழாரம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தியா டுடே தொலைகாட்சிக்கு அவரது இல்லமான போயஸ் கார்டனில் பேட்டியளித்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்களை அவர் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

அப்போது பிரதமர் மோடியை பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன என்ற கேள்விக்கு “பிரதமர் மோடி நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காக கடினமாக முயற்சிக்கிறார். சிறந்தவற்றை செய்ய முயற்சிக்கிறார்.” என்று பதில் கூறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

மேலும் அவர் அரசியலை பற்றிக் கூறுகையில் “நான் இன்னும் முழுமையான அரசியல் பணிகளில் ஈடுபடவில்லை. ஆனால் அரசியல் என்பது மிகவும் சவாலான ஒன்று. மலர்கள் நிறைந்த பாதையில்லை. அத்துடன் ஆபத்தான விளையாட்டு மற்றும் நாடகம் நிறைந்தது. அதில் கவனமுடம் விளையாட வேண்டும். நேரம் மிக முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close