தமிழ் நாடு

கஜா புயல் பாதிப்பால் தமிழகம் துடிக்கும் போது தனியார் சொகுசு விமானத்தில் மு.க.ஸ்டாலின் ஜமாய்ப்பு, சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கலாய்ப்பு! ஆடம்பர பயணம் தேவையா?

கஜா புயல் பதிப்பால் தமிழகத்திலுள்ள 5 மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலுள்ள மக்கள், பாதிப்படைந்த மக்களின் துயரங்களில் பங்கு பெற்று வரும் நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சேலத்திலுள்ள தனது கட்சிக்காரர் ஒருவரது திருமணத்தில் கலந்துக் கொள்ள தனி விமானம் மூலம் தனது மனைவி துர்கா மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடியுடன் பயணம் சென்றுள்ளார். அவரை கட்சிக்காரர்கள் தடபுடலாக வரவேற்று, அழைத்துச் சென்றனர். அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மற்றும் தனி விமான பயணம் தி.மு.க-வினரையே வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது என்று குமுறுகின்றனர் உடன்பிறப்புகள். மு.க.ஸ்டாலினின் இந்த செயலால் மூத்த கட்சியினர் அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி, சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்கள் ஸ்டாலினை கலாய்த்து வருகின்றனர்.

ஏனெனில், மக்கள் மனதில் மிக பிரம்மாண்டமாக இடம் பிடித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகவும் முக்கியமான காரியங்களுக்கு செல்லும் போது மட்டுமே இதுபோல தனியார் ஹெலிகாப்டரை பயன்படுத்தியது உண்டு. மேலும் அவர் உடல்நிலை சுகவீனமானவர் என்பதோடு, இசட் பிரிவு பாதுகாப்புக்கு உட்பட்டவர். இதற்கே கருணாநிதி ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பயணங்கள் குறித்து அவ்வப்போது கிண்டல் செய்வார். சென்ற 2016 சட்டமன்றத் தேர்தலின்போது கூட ஜெயலலிதா உடல் நலம் குன்றியிருந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வதற்காக தனியார் வாடகை விமானத்தை பயன்படுத்தினார். ஆனால் கருணாநிதி போட்டியாக பொது விமானங்களில் சென்றும், கார் மூலம் சில இடங்களுக்கு சென்றும் ஜெயலலிதாவின் விமான பயணங்களை குத்திக் காட்டி தனது பயணம் எளிமையான பயணம் என பெருமையடித்துக் கொள்வார்.

சரி கருணாநிதியாவது பரவாயில்லை… விடுங்கள்! அவருடைய அரசியல் முதல் வாரிசான மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே போய் பிரதமர் மோடி தனி விமானத்தில் தனது குழுவுடன் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வதை அவ்வப்போது குறை கூறுவது மட்டுமின்றி நக்கலடித்தும் வருகிறார். இந்த நிலையில்  கஜா புயல் பாதிப்பால் தமிழகம் துடிக்கும் போது இவர் தனி விமானத்தில் சுமார் ₹3 லட்சம் செலவில் எரிபொருள் செலவு செய்து கொண்டு, கோடிக்கணக்கில் விமான வாடகையையும் செலுத்திக் கொண்டு(அவர் சென்ற சொகுசு விமானம் யாருடையது, வாடகைக்கு எடுக்கப்பட்டதா என்ற தகவல் இல்லை) மனைவி மற்றும் பொன்முடியுடன் இந்த சொகுசு பயணம் தேவையா? மாநில முதல்வரே ₹2500 ஆயிரம் டிக்கெட்டில் பொது விமானத்தில் செய்யும் போது ஸ்டாலினுக்கு என்ன என்று நெட்டிசன்கள் செம கெலாய் கலாய்த்து வருகின்றனர்.

“முதல்வர் புயல் பாதிப்புக்குள்ளான இடங்களை வான் வழியாக சென்று பார்த்ததை நக்கலடித்து ஸ்டாலின் தனி விமானத்தில் சொகுசு பயணம் செய்தது முரண் இல்லையா?”

“பா.ஜ.க தலைவர் தமிழிசை தனது பிரச்சார வாகனத்தை புயல் பாதிப்பு பகுதிகளுக்கு சேவை செய்ய தற்காலிக மருத்துவ உதவி மையமாக மாற்றிய போது, ஸ்டாலின் தனி விமானத்தில் சொகுசு பயணம் மேற்கொண்டு வருகிறார்.”

“ஸ்டாலின் ஒரு பப்பு”

Tags
Show More
Back to top button
Close
Close