விளையாட்டு

மீண்டும் பார்முக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ் புரோ கபடியில் 5-வது சூப்பர் வெற்றி 

புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வென்றது.

இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் ஆறாவது சீசன் தற்போது நடக்கிறது. ‘B’ பிரிவில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் கேப்டன் அஜய் தாகூர், முதல் புள்ளியை பெற்றுத்தந்தார். ஆனால் ராகுல் சவுத்ரி அடுத்தடுத்து புள்ளிகள் பெற தெலுங்கு டைட்டன்ஸ் 8-5 என முந்தியது. பின்னர் சுதாரித்து கொண்ட தமிழ் தலைவாஸ் வீரர்கள் சிறப்பாக விளையாட முதல் பாதியில் 18-11 என முன்னிலை பெற்றனர்.

இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணி வலுவான நிலைக்கு (24-15) சென்றது. முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 31-25 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

இதுவரை மோதிய 15 போட்டிகளில் 5 வெற்றி, 9 தோல்வி, 1 ‘டை’ என மொத்தம் 30 புள்ளிகள் பெற்ற தமிழ் தலைவாஸ் அணி, பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது.

Tags
Show More
Back to top button
Close
Close