செய்திகள்

கஜா புயல் மீட்பு நடவடிக்கைகளில் களத்தில் கலக்கும் பா.ஜ.க இளைஞரணி!

கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது தமிழக பா.ஜ.க இளைஞர் அணி.

தமிழக பா.ஜ.க இளைஞரணியின் நிவாரண பணிகளை தேசிய இளைஞரணி தலைவர் பூனம் மகாஜன், தமிழக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் மற்றும் குழுவினரை தனது ட்விட்டர் கணக்கில் பாராட்டி தள்ளியுள்ளார்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள காமேஷ்வரம் என்ற மீனவ கிராம பகுதியில் புயல் பாதிப்புகளைப் பார்வையிட்டு, 2000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களாக, பெட்ஷீட், புடவை, மெழுகுவத்தி, பிஸ்கட், பால் பவுடர், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர் பா.ஜ.க இளைஞரணியினர்.

பின்னர் கடலோர பகுதியில் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்த மாநில தலைவர் வினோஜ் செல்வம், படகுகளை சீரமைப்பதற்கு ஆகும் செலவுகள் குறித்து கேட்டறிந்தார், இதற்கு உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைப்பேன் என மீனவர்களின் தெரிவித்தார். தொடர்ந்து புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பின் பேட்டியளித்தார், கஜா புயல் பாதிப்பு நேரில் பார்க்கும் பொழுது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த சூழ்நிலை சரியாக சிறிது கால தாமதம் ஏற்படும், மாநில அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மாநில அரசுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டு கொள்வதாகவும், அதே நேரத்தில் இன்னும் வேகமாக நிவாரண பணிகளை முடுக்கி விட்டு மின்சாரம், குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கஜா புயல் மீட்புப்பணியில் தன் குடும்பங்களை துறந்து உயிரை துச்சமாக நினைத்து பணிபுரியும் மின்சாரத்துறை ஊழியர்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினர் பா.ஜ.க இளைஞரணியினர். வினோஜ் செல்வம் மற்றும் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி அங்கேயே தங்கி பல நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு, அடிப்படை தேவை பொருட்கள் பா.ஜ.க இளைஞரணி சார்பாக வினோஜ் தலைமையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கஜா புயல் மீட்பு நடவடிக்கைகளில் பல அமைப்புகளும், கட்சிகளும் ஈடுபட்டு வரும் நிலையில், பா.ஜ.க இளைஞரணியினர் முழு மூச்சில் ஈடுப்பட்டுள்ளது, அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு மக்கள் சேவை புரிந்து வருவது பாராட்டத்தக்கதாக உள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close